வெந்தயம், பூண்டு ஆணம். (குழம்பு)/ vendayam poondu kuzhambu

2016-02-05
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
வெந்தயம், பூண்டு ஆணம். (குழம்பு)
 
விளக்கம்- இது பெண்களுக்காக விஷேசமாக செய்வார்கள்.
வெந்தயம், பூண்டு, பெருங்காயம் சேர்ப்பதால் வாய்வுக்கு சிறந்த மருந்தாக அமையும். எல்லா வயது பெண்களுக்கும் ரொம்ப நல்லத.
 
மாதவிடாயில் ஏற்படும் வயிற்று வலி குரையும். கர்ப்பினி பெண்களின் வாயு பிரச்சனை நீங்கும்.
 
பாலூட்டும் பெண்களுக்கு அதிகம் பால் சுரக்கும். வெள்ளை பூண்டு சேர்ப்பதால் பால் அதிகம் ஊரும்.
 
நம் முன்னோர்கள் வாரம் ஒன்ரு அல்லது இரண்டு நாட்கள் தவராமல் சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றோ நாம் மறந்து விட்டோம். இப்படி சேர் செய்வதால் கொஞ்சம் நினைவூட்டலாம் என்று என்னம்.
 
poondu kulambu
தேவையான பொருட்கள்
 
பூண்டு-2 (பெரியது)
சின்ன வெங்காயம்-15-20
தக்காளி -2
வெந்தயம்-2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
மிளகாய்-1-2
நல்லெண்ணெய்- தேவையான அளவு
பெருங்காய பொடி- 1/4 ஸ்பூன்
மசலா பொடி- 1 1/2 டேபிள் ஸ்பூன்
புளி கரைசல்- 1 டேபிள் ஸ்பூன்
 
அரைக்க வேண்டியவை:
 
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
மசலா பொடி- 1/2 டேபிள் ஸ்பூன்
 
தூள் செய்ய வேண்டியவை:
 
சீரகம்- 2ஸ்பூன்
பெருஞ்சீரகம்- 1/2 ஸ்பூன்
துவரம் பருப்பு -3 ஸ்பூன்
வெந்தயம்-1 ஸ்பூன்
 
செய்முறை:
 
முதலில் அரைக்க வேண்டியவற்றை பட்டு போல் அரைத்து கொள்ளவும்.
 
பின்பு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து வெத்தயம், கடுகு, கறிவேப்பிலை, காய பொடி தூவி தாளிக்கவும்.
 
பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, தோல் உரித்த பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். வதங்கியதும் மசலா பொடி சேர்க்கவும்.
 
பின்பு புளி கரைசல் சேர்க்கவும். பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். குறைந்த தனலில் வேக விடவும்.
 
பின்பு தூள் செய்ய கூறியவற்றை ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் விடாமல் மனம் வரும்வரை வருத்து பின்பு மிக்ஸியில் திரித்து ஆணத்துடன் (குழம்பு) சேர்க்கவும். பின்பு 5நிமிடம் கழித்து இறக்கவும்.
 
அதபியாபாசித்- உடன்குடி
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Recipe Comments

Comments (2)

 1. posted by Srinivasan TK on February 5, 2016

  This is really interesting cuisine. I have small suggestion, where you have to specify, what is Masala Podi (how to make this masala podi & ingredients) & some spices like Karuva,Silippi & how it look like. am typical foodie, interested more in your region food. Please post this clearly and then it will reach to all foodies like me to explore Kayal’s luvly food.

    Reply
  • posted by Admin on February 8, 2016

   உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி… இனி அப்படியே செய்கிறோம்…

     Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *