வெஜ் காதி ரோல்ஸ் / Veg Kathi Rolls

2016-01-13
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

தே.பொருட்கள் :-

கோதுமை சப்பாத்தி -தேவைக்கு
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி -1
காரட் -25 gm
பீன்ஸ்-25 gm
உ.கிழங்கு -1
முட்டை கோசு – 25 gm
வெங்காயத்தாள்-கொஞ்சம்
குடைமிளகாய் -1சிறியது
பட்டாணி -¼ cup
இஞ்சி -1″ inch
ப.மிளகாய் -1
இ.பூ விழுது -1 tsp
மிளகாய் தூள்- 1tsp
மல்லி தூள் -½ tsp
சீரக தூள் -½tsp
கரம் மசாலா -¼tsp
கசூரி மேதி- ½tsp
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -2 tbs
கொ.மல்லி-புதினா சட்னி-¼ கப்
தயிர் -¼ கப்

பொடிதாக நறுக்கிய புதினா.,நீளமாக நறுக்கிய வெங்காயம்,சாட் மசாலாத் தூள் – பறிமாற

 

veg rolls

செய்முறை :-

வழக்கம் போல் சப்பாத்தி செய்துக் கொள்ளவும்.

புதினா,கொ.மல்லி இலை,சிறிது இஞ்சி,ப.மிளகாய்,உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ½ எலுமிச்சை பிழிந்து கலந்து வைக்கவும்.இதில் சிறிது எடுத்து தயிர் கலந்து வைக்கவும்.

காய்கறிகளை நீளமாக. வெட்டிக் கொள்ளவும்.பட்டாணியை முக்கால் பதத்திற்கு வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடு பண்ணி நறுக்கிய இஞ்சி,ப.மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.இ.பூ விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் காரட், பீன்ஸ்,முட்டைக்கோசு,தக்காளி,உ.கிழங்கு,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.சிறிது நேரம் கழித்து குடைமிளகாய்,வெங்காயத்தாள்,பட்டாணி சேர்க்கவும்.

இதில் மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா தூள்,சீரக தூள் சேர்த்து கிளறவும். மசாலா வாசனை போக வதக்கியதும் கசூரி மேதி தூவி கிளறி இறக்கவும்.

சப்பாத்தியை லேசாக தவாவில் சூடு பண்ணி அதன்மேல் புதினா-தயிர் சட்னியை பரவலாக தேய்க்கவும்.பின் காய்கறி கலவையை சப்பாத்தியில் ஒரு பக்கமாக வைக்கவும். அதன்மேல் புதினா,நீளமாக நறுக்கிய வெங்காயம் வைத்து சாட் மசாலா தூவி சப்பாத்தியை இறுகலாக சுற்றவும்.பின்னர் பாதியாக வெட்டி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சூடாக பறிமாறவும்.

Haleemun nisa,
Bangalore.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

 • stuffed chappatti1

  Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *