வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

2017-03-12
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
காயல் சமையல் – காயல் ரிஹாம்ஸ் இணைந்து வழங்கும் ” Healthy foods for healthy kids “

#சமையல்_போட்டி_குறிப்பு : 3

வெஜ் பிரெட் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

ப்ரெட் (அ) பன் தேவைக்கு
எண்ணெய் – 2 tsp
பல்லாரி – 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1(பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1(பொடியாக நறுக்கியது)
குடை மிளகாய் – 1/4 (பொடியாக நறுக்கியது)
காளான் – 5
சுவீட் கார்ன்- ஒரு கைபிடி அளவு
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 tsp
கருவேப்பிலை – ஒரு கொத்து
பெப்பர் பொடி – 1 tsp
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி இலை
sandwich

செய்முறை
***********
கடாயில் எண்ணெய் ஊற்றி பல்லாரி(தாளிக்க கொஞ்சம்) & கருவேப்பிலை போட்டு வதக்கவும்…பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் பல்லாரி, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின்பு கேரட் ,உருளைக்கிழங்கு , குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்…காய்கறி வெந்ததும் காளான் சேர்த்து 3 நிமிடம் கிளரவும், பிறகு சுவீட் கார்ன் சேர்த்து கிளரவும்…. அடுப்பை ஆஃப் செய்த பிறகு பெப்பர் & உப்பு சேர்க்கவும்…. கொத்தமல்லி இலை போடவும்…

🌿 2 பீஸ் ப்ரெட் எடுத்து ஒரு ப்ரெட் ல மயோனைஸ், இன்னொரு ப்ரெட்ல கெட்சப் தடவி கொள்ளவும்….காய்கறிய ப்ரெட்ல வச்சி டோஸ்ட் பன்னி எடுத்தா வெஜ் ப்ரெட் சாண்ட்விச் ரெடி..

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஹெல்த்தி உணவு ரெடி..

🌿குறிப்பு :காய்கறியை ரொம்ப பொடியாக நருக்கி கொள்ளவும்,

இந்த குறிப்பினை நம்மோடு பகிர்ந்தவர்

ரூமைஜா – காயல்
www.kayalsamayal.com

#Rumaiza #kayal_Samayal#healthy_foods_for_healthy_kids#kayal_samayal_cooking_contes #kids_spl

 

Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

 • stuffed chappatti1

  Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *