தக்காளி சாதம் / Tomato Rice

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

More recies please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்

அரிசி-1/4 படி
தக்காளி-4
பெரிய வெங்காயம் -2
மிளகாய்-3
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
தயிர்-2 டேபிள் ஸ்பூன்
வத்தல் தூள்-3 ஸ்பூன்+ காரத்திற்கு ஏற்ப
மல்லி,புதினா- 1 கைப்பிடி
தேங்காய் எண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
நெய்-3 ஸ்பூன்
கறிவேப்பிலை- தாளிக்க

 

tomato-rice

செய்முறை

1. தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து வைக்கவும். வெங்காயம், மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

3.குக்கரை அடுப்பில் ஏற்றி காய்ந்ததும் நெய்+எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டுவிழுது ,கறிவேப்பிலை இலை சேர்த்து தாளிக்கவும்.

4. பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து மிளகாய், மல்லி, புதினா உப்பு,தயிர் மற்றும் வத்தல் தூள் சேர்க்கவும்.

5. பின்பு ஒரு கப் அரிசி என்றால் 2கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை தட்டி குக்கரை மூடி விடவும். ஆவி வந்ததும் விசிலை போட்டு 10 நிமிடம் மிகக் குறைந்த தணலில் வைத்து அனைத்து விடவும். பின் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கிளறி விட்டு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். தக்காளி சாதம் தயார்.

மிகக் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.

Adhabiya Basith
Udangudi

Average Member Rating

(3 / 5)

3 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *