தக்காளி ரசம்/ Tomato rasam

2016-04-09
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

 

ரசம் ஜீரண சக்தியை எளிதாக்குகிறது.

தேவையான பொருட்கள்
தக்காளி நடுத்தரமானது – 3
புளி – சிறு உருண்டை
மல்லிதழை – சிறிது
தண்ணீர் – 4 – 5 கப்
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 -5 பல் ( தோலை நீக்க வேண்டாம்)
உப்பு தேவைக்கு

தாளிக்க
சிகப்பு மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது

 

tomato rasam

செய்முறை

புளியை தண்ணீரில் ஊற வைத்து பிசைந்து சாறு எடுத்து வைக்கவும்.

நன்றாக பழுத்த தக்காளியை புளியுடன் சேர்த்து கைகளை வைத்து பிசைந்து கொள்ளவும்.

தேவையான அளவு உப்பை புளித்தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகம் உரலில் தட்டிக்கொள்ளவும். இதனுடன் பூண்டும் தோல் எடுக்காமல் ஒன்றிரண்டாக தட்டிக்கொளவும்.

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.

கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் , இரண்டாகக் கிள்ளிய சிகப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதோடு தட்டி வைத்த பொருட்களை சேர்க்கவும்.
பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி சிறுது கொதிக்க விடவும்.
அதிக நேரம் ரசத்தை கொதிக்க வைக்க வேண்டியதில்லை.

அடுப்பை அணைத்த பிறகு, மல்லிதழை தூவி இறக்கிவிடவும்.

டிப்ஸ்:

More recipes please visit www.kayalsamayal.com

ரசம் செய்யும் சட்டியில் சூடுடன் ரசம் வைத்திருந்தால் ரசம் அதனுடைய சுவையை இழந்து விடும்.

ரசம் செய்யும்போது ரச பொடியை புதிதாக தயாரித்தால் ரசத்தின் சுவை கூடும்.

மிக அதிக நேரம் ரசத்தை கொதிக்க வைக்கக் கூடாது.

எந்த வகை ரசம் செய்தாலும் புளியின் அளவினை குறைத்து தக்காளி அளவினை கூட்டினால் ரசம் சுவையாக இருக்கும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *