தக்காளி ஊறுகாய் / தொக்கு/ tomato pickle

2014-04-06
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

 

ஊறுகாய் என்ற பெயரை கேட்டாலே பசிக்காத வயிறும் பசிக்கும், ருசியில்லாத உணவும் ருசிக்கும்.. ஊறுகாய் பாட்டில் இல்லாமல் எந்த வீடும் இருக்காது.. தங்கும் விடுதியில் படிக்கும் மாணவ செல்வங்களுக்கும், அயல்நாட்டில் தனியாக வசிக்கும் நண்பர்களுக்கும் தான் இந்த ஊறுகாயின் முழு ருசியும் தெரியும்.. இப்ப இந்தியாவில் அதிகமாக வெயில் காலமாக இருப்பதால் இப்ப அதிகமாக வடகமும், ஊறுகாயும் வீடுகளில் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்..

Ingredients

  • தக்காளி - 1 கிலோ
  • ப மிளகாய் - 10
  • நல்லெண்னெய் - 200 மில்லி
  • முழு பூண்டு - 3
  • உப்பு - தேவைக்கு
  • தாளிக்க:
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் 1/4 டீஸ்பூன்
  • முழு பூண்டு - 1
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

Method

Step 1

பூண்டினை தோல் நீக்கி தனியாக வைக்கவும்

Step 2

முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போடவும் , இதனுடன் பச்சை மிளகாய் 3 முழு பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்

Step 3

பிறகு ஒரு கனமான வாணலியினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும்

Step 4

இதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். தேவைக்கு உப்பு சேர்த்துக்கொள்ளவும். குறைந்த தணலில் வைக்கவும்.

Step 5

மூடி போட்டு அப்படியே தண்ணீர் வத்த வைக்கவும். தக்காளி நன்றாக கனிந்து, பச்சை வாடை போய் நன்றாக எண்ணெய் விட்ட பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்

Step 6

இந்த ஊறுகாய்/ தொக்கினை 1 வாரம் ஆனாலும் கொட்டு போகாது. வெளியூர் பயணங்களுக் இதனை சப்பாத்தி, லெமேன் ரைஸ், தயிர் சாதத்துடன் தோட்டு சாப்பிடலாம்.

Step 7

இது போல் வெறும் சாதத்துடன் கொஞ்சம் தக்காளி ஊறுகாய் பிசைந்து சாப்பிட்டால் இதன் சுவை தூக்களாக இருக்கும்

டிஸ்கி

:

எந்த

வகை ஊறுகாய் நாம் செய்தாலும் அதிகநாள் கெடாமல் இருக்கனும் என்றால் தூள்

உப்புக்கு பதில் கல் உப்பு சேர்த்தால் ரொம்பநாள் ஊறுகாய் கெட்டுபோகாது.

தக்காளி மலிவாக கிடைக்கும்போது அதனை வாங்கி ஊறுகாய் போட்டு வைத்துக்கொள்ளலாம்

. தக்காளி எல்லாம் அதிக நாள் வைத்திருக்க முடியாது

இதுபோல் ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டால்நீண்டநாள்பயன்படுத்தலாம்

இந்த தக்காளி ஊறுகாய் செய்முறையினை நமக்காக பகிர்ந்தவர்

ஃபாத்திமாதம்பி

காயல்பட்டிணம்

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *