Tangy Orange Chicken Pickle

2015-03-25
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

பொதுவாக ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் நாம் அதன் தோலை தூர எறிந்து விடுகிறோம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கு வகுக்கும் அதன் தோல் வாயு தொல்லைகளுக்கும் கொலஸ்ட்ராலை எரிப்பதற்கும் பயன்படுகிறது. ஒரு புதிய முயற்சியை செய்வதற்கு வாய்பளித்த kayalpatnam samayal க்கு என் நன்றிகள். வலைத்தளங்கள் எதிலும் தேடாமல் என் அன்னை தந்த யோசனையை பயன்படுத்தினேன். அன்னையின் எண்ணம் ஒரு போதும் சோடை போகாது அல்லவா ?. நீங்களும் முயன்று பாருங்களேன்.

20150324_102057

தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத chicken – 1/2 கிலோ
ஆரஞ்சு பழ தோல் – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
மிளகாய் தூள் – 3 tsp
எண்ணெய் – 1/2
வினிகர் – 1 tbsp
உப்பு – தேவைக்கு
கடுகு – தாளிக்க

சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 பேர் சாப்பிடலாம் துணை கறியாக

20150324_102640

சமைக்கும் முறை :

1. சிக்கனை நல்ல சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு தேவைபட்டால் சிவப்பு நிற உணவு பொடி சேர்த்து கொள்ளவும்.


2. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
4. chicken துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும்

20150324_102727

5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறவும்

6. பிறகு ஆரஞ்சு தோலை சேர்த்து வதக்கவும்.

20150324_104034

7.அனைத்தும் நன்கு வெந்ததும் வினிகர் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் காற்று புகாத jar ல் போட்டு fridge ல் வைத்து தேவையான போது எடுத்து சாப்பிடவும்.

20150324_120954

குறிப்பு:
அனைத்து வகையான புலாவ்களுக்கும் துணை கறியாக சாப்பிட பிரமாதமாக இருக்கும் இது.
பழத்தின் தோல் சற்று கடினமாக இருந்தால் cooker ல் மூன்று விசில் போட்டு எடுத்து சூடு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் துடைத்து சேர்க்கலாம்.

Hameed Asima..KPM…..

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *