காயல் இனிப்பு ஊறுகாய் (Sweet pickle) 

2015-06-02
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து மகளிர்பாட சாலைகளுக்கு முன் விற்கப்படும்தின்பண்டங்கள் பல, உதா: நெல்லிக்காய்,சொடக்குத்தக்களி, ஒட்டுப்பழம், பனைங்காய்,பணாட்டு, மாங்காய், பகுடு(மரவள்ளிக்கிழங்கு)இப்படி ஏகப்பட்ட தின்பண்டங்கள் இருந்தாலும்அதில் முதன்மை வகிப்பது இந்த இனிப்புஊறுகாய்தான்! மஞ்சள், சிவப்பு கலர்களில்மண் சட்டியில் சிரட்டை அகப்பையால் அள்ளிபூசனி இலையில் வைத்து தரும் அழகே தனி!

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 4

பச்சை மிளகாய் -1

காயல் கலவை மசாலாதூள் – 2 தேக்கரண்டி

வெல்லம் -200 கிராம்

சீனி -2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு – கடுகு, உளுந்து, கருவேப்பிலை

inipu oorugai

செய்முறை:

மாங்காயை கழுவி சுத்தம் செய்த பின் அதைசிறு துண்டுகளாக நறுக்கி அதில் மசாலாத்தூள்,பச்சை மிளகாய்,சிறிதளவு உப்பு (சுவைக்காகமட்டும்) போட்டு அதில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் வெல்லக் கட்டியைஉடைத்துப் போட்டு சிறிது தண்ணீர் விட்டுகாய்ச்சவும்.

அத்துடன் சீனியைக் கலந்து அதுநன்கு கரைந்தபின் இந்த பாகை வெந்தமாங்காய் மீது ஊற்றி அடுப்பில் தீயைக்குறைத்து இளகிய பதம் வரும் வரை கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில்சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி
அதில் கடுகு போட்டு அது வெடித்த பின்னர் உளுந்து,கருவேப்பிலையை போட்டு தாளித்து மாங்காய்பாகு கலவை மீது ஊற்றவும்.

இனிப்பு புளிப்புசுவையுடன் கூடிய வித்தியாசமான காயல்இனிப்பு ஊறுகாய் ரெடி!

இதை எதனோடும்சேர்க்காமல் தனியாக சாப்பிடலாம்.

-Rabiya Rafeeq.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *