Stuffed Chicken Bread:

2015-04-20
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:

பிரெட் செய்ய தேவையான பொருட்கள்:

மைதா/ப்ளைன் ஃபளார் – ஒரு கிலோ
இன்ஸ்டன் ஈஸ்ட் – ஒரு மே கரண்டி
பால் பவுடர் – இரண்டு மே கரண்டி
உப்பு – ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் – 4 மே கரண்டி
முட்டை – 1 + (1 அழகரிக்க)
பொடித்த சீனி – ஒரு டீ ஸ்பூன்

உள் அடக்கம்:

போன்லெஸ் சிக்கன் – அரை கிலோ (வேக வைத்து உதிரித்து வைக்கவும்)
பொடிசாக நறுக்கிய பல்லாரி வெங்காயம் – 2
உப்பு -1 tsp
மிளகுதூள் கார தேவைக்கு
கொத்தமல்லி இலை – சிறுது
பச்சை மிளகாய் – 3
கரம்மசாலா – சிறுது
கான்ப்ளவர் மாவு – 2 tbsp
பட்டர் – 2 tbsp
பால் – 1 கப்
வெள்ளை எள்ளு – அலங்கரிக்க

செய்முறை:

பிரெட் செய்ய:

மேலே சொன்ன பிரெட் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பவுலில் போட்டு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசையவும்.. இதனை அப்படியே மூடி ஒரு மணி நேரம் வைக்கவும்..

உள் அடக்கம்:
பேனில் பட்டர் போட்டு உருகிய பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் சிறுது வதங்கிய பின்பு கான்ப்ளவர் மாவு தூவி பிரட்டவும் இதனுடன் ஒரு கப் பால் சேர்த்து கிளறவும். நன்றாக திக்கான பின்பு சிக்கன் , மிளகுதூள்,கரம்மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இதனை நன்றாக ஆறவிடவும்.

பிரெட் செய்யும் முறை :

மாவினை நான்கு பகுதியாக பிரித்து அதனை சப்பாத்தி போல் வட்டமாக தேய்க்காமல் ஓவல் வடிவில் தேய்க்கவும். (விடியோ வில் உள்ளது போல் ) பின்பு நடுவில் சிக்கன் கலவையினை நீட்டமாக வைக்கவும். பிறகு இரு புறங்களில் ஓரங்களை ஒரு சிறு இடைவெளி விட்டு வெட்டவும். பிறகு அதனை வலது இடது புறமாக மாற்றி மாற்றி வைக்கவும். ( இந்த முறையினை தெளிவாக பார்க்க விடியோ உங்களுக்கு உதவும்)
ரெடி செய்து வைத்த பிரெட்டை ஒரு அவன் ட்ரேயில் வைத்து அதன் மேல் அடித்து வைத்த முட்டை கலவையினை பிரெஷ் செய்யவும். பிறகு அதன் மீது எள்ளினை தூவவும்..
முன் சூடு செய்த அவனில் 200 டிகிரில் 20 முதல் 27 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். பிறகு ஆரிய பிறகு அதன் மீது உருகிய பட்டர் தடவி பரிமாறலாம்… சுவையான ஸ்டப்புடு சிக்கன் ப்ரெட் ரெடி…

“காயல் சமையல்” YOUTUBE விடியோ சமையல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் subscribe, லைக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

Average Member Rating

(5 / 5)

5 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *