சீப்பனியம் / sippaniyam

2016-01-27
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
 
அரிசி மாவைக் கொன்டு பயன்படுத்தும் அனைத்து உணவுமே இஸ்லாமிய பாரம்பரிய உணவே ஆகும். அந்த வகையில் இப்போ பார்க்க போவது சீப்பனியம். இந்த சீப்பனியம் குறிப்பாக கல்யாணம் என்றால் தயாரிப்பார்கள். பெண் வீட்டார் சீதனமாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுப்பது வழக்கம். அவரவர் தகுதிக்கு முடிந்த வரை 500, 1000 என கொடுப்பார்கள்.
 
தேவையான பொருட்கள்
 
அரிசி மாவு (வறுத்து அரித்தது) -1/2 படி
முட்டை மஞ்சள் கரு-2
தேங்காய் பெரியது-2
உப்பு-1/4 ஸ்பூன்
நெய்-1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்- பொறிப்பதற்கு
 
sippaniyam
செய்முறை:
 
தேங்காயை அரைத்து கெட்டியாக பால் பிழிந்து கொள்ளவும். பின்பு பிழிந்த
அதே தேங்காயுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து அடுத்த பால் பிழிந்து தனியே வைக்கவும்.
 
பின்பு மாவுடன் உப்பு, கெட்டி தேங்காய் பால், முட்டை, நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைவதற்கு கெட்டி தேங்காய் பால் போதாமல் போனால் மட்டுமே இரண்டாம் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 
அதன் பிறகு ஒரு உருன்டை எடுத்து உள்ளங் கையில் வைத்து தட்டவும். ஒரு அளவு தட்டியதும் விரலை வைத்து மாவை குலல் போல் சுற்றி வைக்கவும். இப்படி எல்லா மாவையும் சுற்றி வைக்கவும்.
 
பின்பு எண்ணெயை காய வைத்து பொறித்து எடுக்கவும். இதை சீனியுடன் பரிமாறவும். சுவையான மொறுமொறுப்பான சீப்பனியம் தயார்.
 
டிப்ஸ்:
 
மாவுடனே சீனியை சேர்த்தும் பிசையலாம் சுவையாக இருக்கும். ஆனால் சீனி சேர்த்து பிசைந்தால் பனியம் கருத்துவிடும். சீனி போடாமல் பொறிப்பதால் நிறம் மாறாது. ஏர் டைட் டப்பாவில் வைத்து பயன் படுத்தினால் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம்.
 
சமைக்கும் நேரம்.- மாவை பொறுத்தது. 1/2 பிடி என்றால் 2-3 மணி நேரம் ஆகும்.
 
பரிமாறும் அளவு- 25-30 கிடைக்கும்.
 
அதபியா பாசித்
உடன்குடி.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

 • stuffed chappatti1

  Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *