சாம்பார் சாதம் / sambar rice

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

www.kayalsamayal.com

பேச்சுலர்ஸ் ஈசியாகவும் அதே சமையம் ருசியாகவும் சாப்பிட ஏற்றது இந்த சாம்பார் சாதம்எங்க வீட்டில் குட்டிஸ் முதல் பெரியவங்க வரை விரும்பி சாப்பிடும் உணவில் சாம்பார் சாதமும் ஒன்று..வேலைக்கு போவோர் மற்றும் பள்ளிக்கு போகும் குழந்தைகளுக்கு காலையில் சீக்கரம் செய்யக் கூடியது இந்த சாம்பார் சாதம்.

டிபன் பாக்ஸூக்கு ஏற்ற உணவு.

www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்:

அரிசி – 1கப்
துவரம் பருப்பு – 1/2கப்
காய்கறிகள் (பீன்ஸ், கேரட்,பட்டாணி, சோளம்) – 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
நறுகிய தக்காளி – 1
சாம்பார் பொடி – 4 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் – 1/2ஸ்பூன்
புளி பேஸ்ட் – 2ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – தேவைக்கு
பெருங்காயத்தூள் – 1/4ஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
கடுகு – 1/2ஸ்பூன்
சீரகம் – 1/2ஸ்பூன்
காய்ந்த வத்தல் – 2
கறிவேப்பிலை – சிறுது

 

sambar-rice

செய்முறை:

அரிசி, பருப்பை அலசி அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புளிபேஸ்ட், மஞ்சள்த்தூள், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 5கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். 2 விசில் அதிக தணலிலும், 1 விசில் மிதமான தணலிலும் வைத்து அடுப்பை அணைக்கவும்.

சிறுது நேரம் கழித்து குக்கரினை திறந்து கிளறி விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும். இதனை சாம்பார் சாத்தில் ஊற்றவும். பிறகு நன்றாக மசித்து விடவும்.இதன் மேலே சிறுது நெய் ஊற்றி சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

இதனுடன் உருளைகிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

மிக எளிமையான முறையில் சாம்பார் சாதம் செய்துயிருக்கேன்.

Average Member Rating

(4.5 / 5)

4.5 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *