சமையல் சந்தேகம் / Samayal Doubt

2016-01-03
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

சப்பாத்தி , பூரி மாவு பிசையும் முறை பற்றி சொல்லுங்கள் என்று காயல் சமையல் நண்பரின் இமெயில் கேள்வி:

சப்பாத்தி:

சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது கொஞ்சம் அதிக தண்ணீர் (தேவைக்கு) விட்டு மிருதுவா பிசையணும்.

மாவு ரொம்ப மிருதுவாக இருக்கனும்.

மாவு சேர்க்கும் பொழுதே தேவைக்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து விடனும். மாவு கையில் ஒட்டாமல் நன்றாக சேர்ந்து கெட்டியாக இருக்க வேண்டும்.

மாவு பிசையும் பொழுது வெது வெதுப்பான நீருடன், வெது வெதுப்பான பால், சிறுது நெய், அல்லது எண்னெய் இதில் ஏதாவது ஒன்று சேர்த்து பிசையும் பொழுது மாவு நல்ல மிருதுவாக இருக்கும்.

மாவு பிசைந்து ஒரு அரை மணி நேரம் மூடி போட்டு ஊர வைத்தால் சப்பாத்தி செய்யும் பொழுது மிருதுவாக இருக்கும்

சப்பாத்தி தேய்க்கும் பொழுது மெல்லிதாக தேய்க்க வேண்டும். கனமாக செய்தால் சப்பாத்தி உரத்துபோய் இருக்கும்.

பூரி:

பூரி மாவு சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியா இருக்கணும். ரொம்ப மிருதுவா இருக்க தேவை இல்லை.

பூரி மாவு பிசைந்தவுடனே பூரி செய்யலாம்.

பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகமல் இருக்கும்.

உங்களின் சமையல் சந்தேகம் ஏதுவாக இருந்தாலும் kpmsamayal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முடிந்தவரை விரைவில் பதில் தர காத்திருக்கிறோம்…

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • idli

    Samayal Doubt / Idly Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *