sago agar agar / ஜவ்வரிசி லேயர் கடல்பாசி

2016-06-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

#Kayal_Samayal #Iftar_Special #Agar_Agar#Kadalpasi #Chinagrass

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்

கடல்பாசி 20 கிராம் பேக்
தண்ணீர் – 250 மில்லி
பால் – 500 மில்லி
சீனி – 1 கப் ( இனிப்பு அளவு தேவைக்கு )
ஏலக்காய் பொடி – இரண்டு டீஸ்பூன்
பூட் எஸன்ஸ் கலர் – ரோஸ் மற்றும் பச்சை
ஜவ்வரிசி காய்ச்ச:

ஜவ்வரிசி – 70கிராம்
தண்ணீர் 3 கப்

 

javvarisi agar agar

செய்முறை:

1.முதலில் ஒரு பேனில் ஜவ்வரிசி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சவும்.

2.கண்ணாடி போல் ஜவ்வரிசி மாறிய பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு ஜவ்வரிசியினை வடிகட்டியில் வைத்து தண்ணீரை வடித்துவிடவும்.

3.பிறகு குளிர்ந்த தண்ணீரில் அலசி இரண்டு பகுதியாக ஜவ்வரிசி யினை பிரித்து வைக்கவும்.

4. ஒன்றில் சிறுது ரோஸ் எஸ்ஸென்ஸ் அடுத்த ஒன்றில் பச்சை எஸ்ஸென்ஸ் கலந்து வைக்கவும்.

கடல்பாசி செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

5.கடல்பாசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

6.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கடல்பாசி சேர்த்து, கடல்பாசி கரையும் வரை காய்ச்சவும். நன்றாக கடல்பாசி கரைந்த பின்பு சீனி சேர்த்து கரையவிடவும். நன்றாக கரைந்த பின்பு பால் சேர்க்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி சேர்த்து கலந்தவுடன் இரண்டு நிமிடம் கரைந்தவுடன் அடுப்பினை ஆப் செய்யவும்.

7.ரோஸ் ஜவ்வரிசி பவுலில் கடல்பாசி பாலில் 3ல் ஒரு பகுதி கலந்து ஜெல்லி மோல்ட் ல ஊற்றி ஃப்ரிஜரில் 5 நிமிடங்கள் வைக்கவும்.

8.நன்றாக செட் ஆன பின்பு உரைந்த ரோஸ் கடல்பாசி அடுத்த லேயர் ப்ளேன் பால் கடல்பாசி கொஞ்சமாக சின்ன லேயர் ஊற்றி மீண்டும் ஃப்ரிஜரில் வைத்து செட் செய்யவும்.

9. கடைசி லேயர் பச்சை ஜவ்வரிசியில் மீதியிருக்கும் கடல்பாசி பாலினை சேர்த்து நன்றாக கலந்து செட் ஆன வெள்ளை லேயர் மேல் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.

10. குறைந்தது 6 மணி நேரம் ஃப்ரிஜ்ஜி வைத்து பிறகு ஜெல்லி மொல்டை எடுத்து வெளியில் 5 நிமிடம் வைத்த பின்பு ஜெல்லி மொல்டு ஓரங்களில் கத்தி அல்லது ஸ்பூன் வைத்து சிறுது பிரித்து விடவும். பிறகு ஒரு தட்டினை மேலே வைத்து ஜெல்லி பவுலை கவுத்திவிட்டு பவுல் மேலே லேசாக கைகளை வைத்து தட்டிவிட்டால் கடல்பாசி தனியாக பிரிந்து தட்டில் இருக்கும்..

சுவையான ஜவ்வரிசி லேயர் கடல்பாசி ரெடி..

More recipes please visit www.kayalsamayal.com
டிப்ஸ்:

1.கடல்பாசி காய்ச்சிய பிறகு பாலினை வடிகட்டி வைத்து வடித்து விட்டு ஜவ்வரிசி யில் சேர்த்தால் கடல்பாசி soft ஆக வரும்.

2. லேயர் கடல் பாசி செய்யும் பொழுது சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பிரிந்து தனி தனியாக வரும். அதுக்கு ஒரு லேயர் செட் ஆன பின்பு அதன் மேல் சிறுது கத்தி வைத்து ஆங்காங்கே சிறுது கீரிவிட்டு அடுத்த லேயர் ஊற்றவும்.
More recipes please visit www.kayalsamayal.com

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *