கிள்ளி வடகம்/ Rice vadagam

2016-04-14
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

‪#‎காயல்_சமையல்_சம்மர்_ஸ்பெஷல்‬

வெயில் காலம் வந்தாச்சு.. இப்ப பல பேர் வீடுகளில் வடகம் போட ஆரம்பித்து இருப்பிங்கனு நினைக்கிறேன்.. புதுசாக வடகம் செய்யனும் என்று நினைப்பவர்கள் இதனை ட்ரை பண்ணலாம்.. கொஞ்சம் வடகம் போட இப்ப நேரம் போனாலும் வருடம் முழுவதும் நாம் இதனை வைத்து பயன்படுத்தலாம்.. நிறைய வகையான வடகம் செய்யலாம்.. இன்னைக்கு சிப்பிலாக ஈசியாக செய்யகூடிய வடகம் செய்வது எப்படினு பார்க்கலாம்..

கிள்ளி வடகம்

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருகள்:

புழுங்கல் அரிசி ஒரு கப் (ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும்)

தண்ணீர் 2லிட்டர்,

உப்பு – தேவைக்கு

பூண்டு- 1 பெரியது

வெங்காயம் 1/4 கிலோ

பச்ச மிளகாய் -5

சோம்பு 1 ஸ்பூன்

இஞ்சி – சின்ன துண்டு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

vadagam

செய்முறை :

More recipes please visit www.kayalsamayal.com

ஒரு பெரிய அடிகணமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடு செய்யவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அரைத்த மாவினை சேர்க்கவும். கட்டி படாமல் நன்றாக காய்சவும்.

நன்றாக வெந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்ச மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உரலில் தட்டிய சோம்பு தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தணலில் வேக வைக்கவும்.

விடியற் காலை யில் மொட்டை மாடியில் நன்றாக வெயில் வரும் இடத்தில் துணி விரித்து அதில் செய்து வைத்த மாவை கையால் எடுக்கும் அளவுக்கு ஆறியவுடன், கையில் தண்ணீர் தொட்டு நனைத்துக்கொண்டு மாவை கிள்ளி துணியில் போட்டு வெயிலில் காயவைக்கவும்.

நன்றாக காய்ந்தவுடன் வடகத்தினை எடுத்து காற்றுபுகாத டப்பாவில் போட்டுவைக்கவும்.

குறிப்பு:

More recipes please visit www.kayalsamayal.com

3 நாள் வெயிலில் நன்றாக காய வைக்கவும்.

மாவு பதம்: மாவு வெந்து விட்டதா என்பதற்கு கையை தண்ணிரில் நினைத்து மாவு மேல் வைத்தால் கையில் ஒட்டாது .

30 நிமிடம் வரை கைவிடமல் காய்ச்சவும்.

பெரிய சட்டியில் வைத்து வடகம் செய்தால் கிண்டுவது ஈசியாக இருக்கும்..

பாத்திமா நாச்சி – காயல்பட்டினம்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *