சோத்து வடை / Rice Vada

2014-02-23
  • Yield : 8-10
  • Servings : 4
  • Prep Time : 8:0 h
  • Cook Time : 20m
  • Ready In : 8:20 h

காயல் மாலை நேர உணவுகளில் மஞ்சள் வாடா போல் சோத்து வடையும் பிரபளம்.
எல்லா ஊர் குடும்ப பெண்களிடம் நல்ல பழக்கம் இருக்கும்.. எந்த ஓரு சாப்பிடும் பண்டங்களையும் வேஸ்ட் பண்ணமாட்டாங்க.. ஏதாவது ஒரு வகையில் அதனை பயன்படுத்திவிடுவாங்க.. எவ்வளவு தான் நாம் சரியான அளவில் சோறு வைத்தாலும் ஒரு கொத்து சோறு மிஞ்சும் அதனை மறு நாள் சோறு ஆக்கும் பொழுது சேர்ப்பாங்க, அல்லது வெயில் காலமாக இருந்தால் பழைய சோறு செய்தோ அல்லது ஆப்பத்துக்கு போட்டோ சாப்பிடலாம்.. அது போல் காயல்பட்டிணத்தில் மிஞ்சிய சோத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் வடை செய்து சாப்பிடுவோம்.. வீடுகளில் மட்டும் அல்ல இந்த வடை கடைகளிளும் விற்க்கப்படும்..

Ingredients

  • பழைய சோறு - 1/2 கப்
  • ரவை - 1/2 கப்
  • மைதா- 1-2 மே கரண்டி
  • மஞ்சள் தூள் - தேவையான அளவு
  • தேங்காய்ப்பூ - 4 மேசைக்கரண்டி + அரை மூடி
  • பெரிய வெங்காயம் - 3 இறால் - 15-20
  • காயல் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • கருவேப்பிலை - சிறிது
  • மாசித்தூள் - 2 மேசைக்கரண்டி
  • சோடா உப்பு - சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொறிக்க

Method

Step 1

முதலில் இறாலை கழுவி சிறிது மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி காயல் மசாலாத் தூள், உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை ,பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

Step 2

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, கருவேப்பிலை, மசாலாத்தூள், அரை மூடி துருவிய தேங்காய் பூ , மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பிரட்டிய இறாலை சேர்த்து வதக்கவும்.தீயை மிதமானதாக வைக்கவும். நன்றாக கலவை வதங்கிய பிறகு மாசித்தூளை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து இறக்கி தனியாக வைக்கவும்.

Step 3

வடை தட்டும் முறை: ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள், 4 ஸ்பூன் தேங்காய்ப்பூ ,சோடா உப்பு, சோறு சேர்த்து பின் ரவை , மைதாபோட்டு நன்கு கைகளால் பிசைந்துக்கொள்ளவும். 4-6 மணிநேரம் ஊறவிடவும்.

Step 4

பின் ஒரு வெள்ளை துணி தண்ணீரில் நனைத்து அதை நன்கு பிழிந்து தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும். இதனை ஒரு பலகையில் விரித்து அதன் மேல் ஒரு சிறு உருண்டை அளவு மாவை எடுத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். கைகளில் தண்ணீர் முக்கி மாவு எடுத்தால் ஈசியாக வரும்

Step 5

பின் அதன் மேல் செய்து வைத்த இறால் மாசி கலவையை சிறிது வைத்து அந்த துணியிலேயே சிறிது இடை வெளி விட்டு இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த அளவு மாவையும் தட்டி முதலில் தட்டி வைத்ததின் மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும்

Step 6

வடைவெடித்து இருக்காமல் ஒட்டி மூட வேண்டும். சுற்றி வரை சமமாக ஓட்டி விடவும். அப்பொழுதுதான் பொரிக்கும் போது உள்ளே வைத்த இறால், மாசி கலவை வெளியில் வராது. வடையில் வெடிப்பு இருந்தால் எண்ணெயில் பொறிக்கும் பொழுது வெடித்து உள்ளே இருக்கும் கலவை வெளி வந்துவிடும். ஆகையால் பக்குவமாக செய்யவும்

Step 7

இதே போல் எல்லா மாவையும் செய்து எண்ணெய் சூடாக்கி மிதமான தீயில் வைத்து இரு புறமும் பொரித்து எடுக்கவும். சுவையான சோத்து வடை தயார்

Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Recipe Comments

Comments (5)

  1. posted by Admin on February 23, 2014

    test

      Reply
  2. posted by கீழக்கரை அலி பாட்சா on February 24, 2014

    இதை கீழக்கரையில் வாடா என்பார்கள். குறிப்பாக ரம்ஜான் நாட்களில் அதிகமாக சுடப்படும்

      Reply
  3. posted by Rabiya Rafeeq on February 24, 2014

    Wow!

      Reply
  4. posted by Natchi on August 19, 2015

    Sorai grind panna maateenkla?

      Reply
    • posted by Admin on September 8, 2015

      கைகளால் பிசையும் அளவுக்கு சோறு மசிந்து இருந்தால் அரைக்க வேண்டாம்.. தேவைபட்டால் கொஞ்சம் மிக்சியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்… நன்றி

        Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *