சோத்து வாடா/ Rice vada

2016-01-18
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

காயல் சமையல் போட்டி:-
இஸ்லாமிய பாரம்பரிய சமையல்

=============

வீண் விரயம் செய்வது இஸ்லாத்தில் ஆகாத செயல்.அதிலும் சாப்பாட்டை வீணாக்கவே கூடாது. மீதமிருக்கும் சாப்பாட்டை வீணாக்காமல் அதிலிருந்து சுவையான புதிய உணவை  தயார் செய்து விடுவார்கள் நம் முன்னோர்கள். அதில் ஒன்றுதான் சோத்து வாடா. மீந்த சாதத்தில் செய்வது. காயலர்கள் என்றுமே ருசியான உணவு வகைகளுக்கு பெயர் எடுத்தவர்கள். இந்த சோத்து வாடாவிலும் நெய் சோறு சேர்த்து செய்வார்கள். மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.

தே.பொருட்கள் :-

நெய் சோறு (அ) சாதா சோறு  -1தட்டு 
ரவை -2-3 tbs
துருவிய தேங்காய் -2 tbs
எண்ணெய் – பொறிப்பதற்கு

அடக்கம் (கலியா) செய்ய:-

வெங்காயம் – 3-4
முட்டைக்கோஸ் – 100கிராம் 
காரட் – 1
கறிவேப்பிலை,ப.மிளகாய்,கொ.மல்லி இலை -கொஞ்சம்
வரட்டிய இறால் (அ) மாசித்தூள் -கொஞ்சம்
காயல் கீரைப்பொடி -கொஞ்சம்
உப்பு -தேவைக்கு

எண்ணெய் – தாளிக்க

ricevada

செய்முறை :-

சோறு ப்ரிட்ஜ் -ல் வைத்ததெனில் லேசாக சூடு பண்ணி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

அதனுடன் ரவை,துருவிய  தேங்காய் சேர்த்து உள்ளங்கையில் தண்ணீர் தொட்டு  பிசையவும். உப்பு தேவை இல்லை.தேவைப்பட்டால் மிகச்சிறிதளவு சேர்க்கவும்.

மாவு சற்று தோய்வாக இருப்பின் இன்னும் கொஞ்சம் ரவை சேர்த்து பிசையவும்.

கலியாவிற்கு கொடுத்துள்ள காய்களை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து காய்கறிகளை போட்டு உப்பு,ம.தூள் சேர்த்து வதக்கவும்.

ப.மிளகாய்,கொ.மல்லி இலை சேர்க்கவும்.

வரட்டிய இறால் இருந்தால் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து மாசித்தூள்,காயல் கீரைப்பொடி சேர்த்து கிளறவும்.

எண்ணெய் சூடு பண்ணி வாடா மாவை தட்டி நடுவில் கலியா வைத்து மூடி சூடான எண்ணெயில் பொறித்தெடுக்கவும். சுவையான வாடா ரெடி…

குறிப்பு:

எண்ணெய் ஓரளவு சூடாக இருக்க வேண்டும்.பொன்னிறமான நிறம் வரும் வரையில் அகப்பை விட கூடாது. இல்லையெனில் நமுத்து பிரிந்து விடும்.கவனமாக கையாள வேண்டும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *