ரமலான் நோன்பு கஞ்சி /ramadan kanji

2015-06-24
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ரமலான் நோன்பு கஞ்சி
நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவில் ரமலான் கஞ்சி மிக முக்கிய உணவாகும்… இது செய்வதும் மிகவும் சுலபம்.. ஒவ்வொரு ஊரிலும் பல விதமாக கஞ்சி செய்வார்கள். இது காயல்பட்டினம் ஸ்பெஷல் ரமலான் கஞ்சி…
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் – 250 கிராம்
பச்சரிசி – ஒரு கப்
சிறு பயிர் – அரை கப்
மஞ்சள்தூள் – 3 டீ ஸ்பூன்
கறி மசலாதூள் – 5 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புதினா, மல்லி, ரம்பை இலை – தேவையான அளவு
தாளிக்க:
நெய் , எண்ணெய் – 150 மில்லி
இஞ்சி பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் – 2
பட்டை – 2 பெரியது
கிராம்பு – 5
ஏலக்காய் – 6
கருவேப்பிலை – சிறிதளவு
பல்லாரி – 2
தக்காளி – 3
கேரட் – 50 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
முட்டைக்கோஸ் – 50 கிராம்
உருளைகிழங்கு – 1
தேங்காய் பால் – 2 கப்

தாளிக்க:
நெய் , எண்ணெய் – 150 மில்லி
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் – 2
பட்டை – 2 பெரியது
கிராம்பு – 5
ஏலக்காய் – 6
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
சிறுபயிரை இலேசாக வருத்து அவற்றுடன் அரிசியைக் கலந்து நன்றாக அலசிய பின்பு அதில் மஞ்சள்தூள், மசாலாத்தூள், உப்பு, புதினா, மல்லி இலைகள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்.
சாதம் நன்றாக குழைய வெந்தபின் அதனை நன்றாக் ஆற வைத்து தேவைக்கு சிறுது தண்ணீர் சேர்த்து ப்ளண்டரில் அரைத்து எடுக்கவும்.
குக்கரில் நெய் , எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய காய்கறிகளுடன் புதினா, மல்லி, சிக்கன் துண்டுகள் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு நன்றாக மசிய வேக வைத்து எடுக்கவும்.
வேக வைத்த சிக்கன் மற்றும் காய்கறி கலவை நன்றாக வெந்த பின்பு ப்ளண்டரில் விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
அடி கனமான ஒரு சட்டியில் அரைத்தெடுத்த சாதம் மற்றும் சிக்கன் காய்கறி விழுது சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குறைந்த தணலில் சூடு செய்யவும். அடி பாகம் பிடித்து விடாத வண்ணம் இடையில் கிளறி விடவும். சிறுது கஞ்சி கொதிக்கும் பொழுது தேங்காய்பால் ஊற்றி மீண்டும் சூடு செய்யவும். கடைசியாக சிறுது பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பினை அணைக்கவும்..

சூடான சுவையுடன் கூடிய ரமலான் கறிக்கஞ்சி தயார். இதனை வாடா, வடை, பஜ்ஜியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்…

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *