புளிச்சோறு / puli sadam

2016-03-09
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

        புளிச்சோறு ஐய்யங்கார் ஆத்து கலாச்சாரமா இருந்தாலும் நம்ம இஸ்லாமிய பாரம்பரியத்துல கலந்திட்ட உணவாக தான் இருக்கு….

              நாம் சிறு பிராயத்திலிருந்தே  வீட்டில் பெரியவங்க நீண்ட தூர பிரயாணம்  போகும் போது 2 நாளைக்கு கூட கட்டி கொண்டு போவாங்க…பரம்பரையாக இப்போ நம்மளும் பேக் பண்ணி குடுக்றோம்…

                 குற்றாலம் போன்ற சுற்றுல்லா தலங்களுக்கும்  சாப்பாடு கெட்டு போகாம இருக்க புளிச்சோறு, லெமன் சாதம் அப்போதிலிருந்து இப்போது வரை நடை முறைல இருக்கு….

            பல பேருக்கு  வெளியே வாங்கி சாப்பிடுறது பிடிக்காமலும் இருக்கலாம்,
ஒவ்வாமையும் இருக்கலாம் அப்போது நீண்ட பிரயாணம் போறவங்க புளி சாதம் கொண்டு போறது வழமை…

              கல்யாண சாப்பாடு, நேர்ச்சை சாப்பாடு மிஞ்சி இருந்தாலும் வீண்விரயம் பண்ணாமல் காலை உணவு அல்லது மதிய உணவுக்குணு  புளிச்சோறு தான் நியாபகம் வரும்…

               இதற்கு வரட்டு கறி,தக்காளி குழம்பு, மாசி பொறியல் பொருத்தமா இருக்கும்….சில பேர் தேங்காய் பால் ஊத்தியும்  சோறு சமைச்சு புளிச்சோரு செய்வாங்க…

               

puli

தே.பொருட்கள்

சமைச்ச சோறு    800 கிராம்(ஒருகுட்டான்)

புளி                        75 கிராம்

பூண்டு                     5பல்லு

வத்தல்                    4பெரியது

நல்லெண்ணைய்    100மில்லி

வெ.உளுந்து,   க.பருப்பு, வேர்கடலை, கடுகு, கறிவேப்பிலை, உப்பு தேவைக்கு…

செய் முறை

உங்கள்  விருப்பப்படி சாதம் சமைச்சு வைக்கவும்…புளியை ஊற போட்டு சாறு எடுத்து வைக்கவும்…பூண்டை நறுக்கி வைக்கவும்…

        பிறகு  அடுப்பில் வாணலி ஏற்றி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடித்ததும் வத்தல்,பூண்டு மற்றும் மேலே சொன்ன அனைத்தையும் போட்டு எல்லாம் பொன்னிறமானதும் புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்..புளி வாசனை போனதும் சாதத்தில் தட்டி கொஞ்சம் ஊய விடவும்….
வத்தலை  சுட்டு புளி கரைசலில் நன்றாக பினைந்து விட்டால் நல்ல காரமாக இருக்கும்…

              அனுப்புனர்

மீறா சுல்தான்

Average Member Rating

(2 / 5)

2 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *