புதினா கொத்தமல்லி சட்னி/ pudina chutney

2015-10-16
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

20150812_083356

புதினா இலை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. செரிமானத்திற்கு மிகவும் உகந்தது. புதினா இலைகளை நாம் அதிகம் பிரியாணியில் மட்டும் தான் சேர்ப்போம்.. ஆனால் அதன் சத்துக்கள் தெரிந்தால் ஏதாவது ஒரு வகையில் நாம் புதினாவை உணவில் சேர்த்துக்கொள்வோம்.. புதினா இலைகள் சட்னி, குழம்பு, சாலட், சூப், பச்சடி மற்றும் டீ போன்ற அனைத்து உணவுகளிலும் புதினாவை சேர்த்து செய்யலாம். .இன்று புதினாவைப் பயன்படுத்தி சுவையான சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
மல்லித்தழை – பாதி கைப்பிடி
கறிவேப்பிலை – 5-6 இலைகள்
சின்ன வெங்காயம் – 4
உளுத்தம்பருப்பு – 1 /2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கடுகு – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 – 3 கார தேவைக்கு
தேங்காய் துருவியது – 2 தேக்கரண்டி
புளி – சின்ன நெல்லிக்காய் விட கம்மியாக
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – ஒரு மே கரண்டி

pudina

செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து உளுத்தம் பருப்பு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

இதனுடன் புதினா, மல்லித்தழை சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.
இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

சூடு ஆறியதும் புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து ஒரு பவுலில் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு அதில் கடுகு , காய்ந்த வத்தல் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியின் மேல் தாளிப்பை ஊற்றவும்..

சுவையான புதினா சட்னி ரெடி… சாதம், இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பாத்திமா – காயல்பட்டினம்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *