இறால் தலை சட்னி / prawn head chutney

2015-02-06
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

இறாலை கிளீன் பண்ணும் பொழுது தலையினை பலரும் சமையலில் சேர்ப்பது இல்லை. இனி இறால் தலையினை சமைக்காமல் தூக்கி போடுபவர்கள் இப்படி செய்து சாப்பிட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.

Prawn head

 

தேவையான பொருட்கள்

இறால் தலை – 100 கிராம்
தேங்காய் – ஒரு கப் ஆறு மே .கரண்டி
பொறிகடலை – ஒரு மே.கரண்டி
வற்றல் – 5 – 6 (கார தேவைக்கு)

பூண்டு – 2 பல் 
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கு
காயல் மசாலாதூள் – சிறுது

செய்முறை:

இறால் தலையினை நன்றாக சுத்தம் செய்து அதில் காயல் கறி மசாலா தூள் , உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வாணலியில் நன்றாக வறட்டவும் . தண்ணீர் நன்றாக வற்றி நன்றாக வறண்டதும் சிறுது ஆறவிடவும்.
பிறகு மிக்ஸியில் இறால் தலை கலவை மற்றும் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் போட்டு அரைக்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
இதனை ரசம் சோறு, அல்லது ப்ரெட் ல் ஸ்பேரேட் செய்தும் சாப்பிடலாம்.

எல்லா கடலோர ஊர்களில் இறால் தலையினை தூக்கி போடாமல் இதுபோல் சட்டினி, சூப் செய்து சாப்பிடுவார்கள் .

 

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *