பூசணி பொரியல் / Poosani Poriyal

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

#Kayal_Samayal# #Poosani_Poriyal#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

பூசணிக்காய் – 500 கிராம்

மஞ்சள் தூள் – தேவைக்கு

தேங்காய் பூ – கால் மூடி

பச்சை மிளகாய் – 3

நச்சீரகம் – 1/2 தேக்கரண்டி

சோம்பு – 1/2 தேக்கரண்டி

முழு மிளகு – 1/2
தேக்கரண்டி

உப்பு – தேவைக்கு

வத்தல்தூள் அல்லது கீரைப்பொடி – ஒரு சிட்டிகை

#தாளிக்க:

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

கடுகு – 1மேஜைக்கரண்டி

கருவேப்பிலை – 2 முழு இலை
poosani-potiyal

#செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. முதலில் அடுப்பை பற்ற வைத்து சட்டி காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் கடுகு,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

2. அதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்த பூசணிக்காயை சேர்க்கவும்.

3. அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

4. 3/4 பாகம் வெந்ததும் தேங்காய் பூ போட்டு சட்டியை மூடி ஒரு 5 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

5. பிறகு அடுப்பை அணைத்து சட்டியை இறக்கிய பின்பு நச்சீரகம்,சோம்பு,மிளகு எல்லாவற்றையும் இடித்து அந்த பூசணிக்காயில் சேர்க்கவும்.

6. பின் கீரைப்பொடி தூவி அதனை பிரட்டி பரிமாறவும்.

சுவையான சத்து நிறைந்த பூசணிக்காய் பொரியல் தயார்

சூடான ரசம், சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

#டிப்ஸ்:

இதே செய்முறையில் பூசணிக்கு பதில் உருளைக்கிழங்கு பயன்படுத்தியும் செய்யலாம்.

இந்த ரெசிபியை நமக்காக செய்து அனுப்பியவர்

Beevi Fathima – ஹாங்காங்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *