பீடா ப்ரெட் & கொண்டைக்கடலை குருமா /Pita Bread & Chickpeas Kurma

2016-02-10
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
பீடா ப்ரெட் & கொண்டைக்கடலை குருமா (Pita Bread & Chickpeas Kurma)
 
pita bread
இந்த பீடா ப்ரெட்டை அரபு ரொட்டி என்று கூட சொல்லலாம் (Wikipedia). இது ஈரான், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலியமானது. இதை ஹும்மூஸ், க்ரில்ட் சிக்கன், மற்றும் பிடித்தமான க்ரேவியுடன் சாப்பிடலாம். ஒரு சிலர் இதன் நடுவில் ஃபலாபெல் மற்றும் பிடித்தமான பூரணம் வைத்து சாப்பிடுவார்கள். இதனுடன் கொண்டைக்கடலை குருமா சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
பீடா ப்ரெட்
 
தேவையான பொருட்கள்:
2 3/4 கப் கோதுமை/மைதா மாவு
1 டேபிள் ஸ்பூன் சக்கரை
11கிராம் ட்ரை ஈஸ்ட்
1/4 டீஸ்பூன் உப்பு
3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்/சமயல் எண்ணெய்
1 கப் தண்ணீர்
 
செய்யும் முறை
 
1. முதலில், ஒரு டம்ளரில், 1 கப் தண்ணீர், ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து நுரை விடும் வரை வைக்கவும்.
 
2. ஒரு பெரிய கிண்ணத்தில், உப்பு, கோதுமை மாவு மற்றும் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதில் ஈஸ்ட் கலந்த கலவயை ஊற்றி நன்றாக பிசைந்து 1 மணி நேரம் மூடி வைக்கவும்.
 
3. பிசைந்த மாவை 1 மணி நேரம் சென்று, கை களால் குத்தி காற்றை வெளியாக்கவும்.
 
4. மாவை 8 ஆக பிரித்து, பந்து போல் உருட்டவும்.
 
5. எண்ணெய் தடவிய தட்டில், மாவு பந்துகளை அடுக்கி வைக்கவும்.
 
6. 10 நிமிடம் சென்று, மாவு பந்துகள் இரண்டு மடங்கு ஆகி விடும்.
 
7. இப்பொழுது, அதை சப்பாத்திக்கு தேய்ப்பதை விட கொஞ்சம் தடிப்பமாக தேய்த்து மறுபடியும் 5 நிமிடம் வைக்கவும்.
 
8. நான் ஸ்டிக் பான் அல்லது சப்பாத்தி சுடும் கல்லால் தேய்த்த மாவை சிறிய தீயில் சுட்டு எடுக்கவும்.
 
கொண்டைக்கடலை குருமா
 
தேவையான பொருட்கள்:
 
2 பெரிய வெங்காயம் ( நீளமாக நறுக்கவும்)
2 தக்காளி ( நீளமாக நறுக்கவும்)
2 கப் வேக வைத்து தோல் நீக்கிய கொண்டைக்கடலை
1 கப் கோழி துண்டுகள் (விரும்பினால்)
2 பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கவும்)
1 உருளைக் கிழங்கு (பொடிதாக நறுக்கவும்)
2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி சீரக தூள்
2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு தேவைக்கேற்ப
1 பட்டை,1 கிராம்பு, 1 ஏலக்காய்
2 கொத்து கருவா இலை
எண்ணெய் தாளிக்க
தண்ணீர் தேவைக்கேற்ப
4 துண்டு தேங்காய்
7 முந்திரி
 
செய்யும் முறை:
 
1. முதலில், கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், கருவா இலை சேர்த்து தாளிக்கவும்.
2. அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்க்கவும்.
3. தக்காளி வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சீரக தூள் சேர்க்கவும்.
4. அதில், கோழி துண்டுகள், பச்சை மிளகாய், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
5. மிக்ஸியில் தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து நன்றாக அரைத்து, கொதிக்கும் குருமாவில் சேர்க்கவும்.
6. க்ரேவி பதம் வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அனைக்கவும்.
 
pita bread
சமைக்கும் நேரம் : 1 1/2 மணி நேரம்
 
பரிமாறும் அளவு: 8 பீடா ப்ரெட் கிடைக்கும்.
 
ஆயிஷா அப்துல் ஜபார்
 
மலேசியா
 
 
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *