பாவ் பாஜி/ pav bhaji

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தே.பொருட்கள்:-
===============

பாவ் பன் -6
உருளைக் கிழங்கு -¼kg
வெங்காயம் -1cup
தக்காளி -½cup
பச்சைப் பட்டாணி -½ cup
காரட் -1 cup
பீன்ஸ் -½ cup
இஞ்சி-பூண்டுவிழுது-1
பிரிஞ்சி இலை-1 சிறியது
பட்டை,கிராம்பு,ஏலம்-சிறிது
மல்லித் தூள் -1tsp
மிளகாய் தூள்-1tsp
மஞ்சள் தூள்-¼tsp
சீரக தூள்-½tsp
பாவ் பாஜி மசாலா-3tsp

உப்பு -தே.அளவு
எண்ணெய் -தே.அளவு -2 tbs

pav bhaji

அலங்கரிக்க:-
பட்டர்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொ.மல்லி தழை,எலுமிச்சம் பழம்.

காய்கறிகளை பொடியாக நறுக்கி அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்.உ.கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை,பட்டை,கிராம்பு,ஏலம் சேர்த்து வதக்கவும். இதில் இ-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

வெங்காயம்,தக்காளி ,உப்பு  சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உ.கிழங்கு தவிர மற்ற காய்களை போட்டு வதக்கவும்.இத்துடன் அனைத்து மசாலா தூள்களை சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நன்கு மசிய வேக விடவும்.வெந்ததும் சிறிது மசித்து ,ஏற்கனவே மசித்து வைத்துள்ள உ.கிழங்கு சேர்த்து கிளறவும். எல்லாம் நன்கு சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும்.

தோசைக் கல்லை சூடு பண்ணி பாவ் பன்னில் பட்டர் /நெய் தடவி சிறிது ரோஸ்ட் செய்து,மசாலாவுடன் வைத்து அலங்கரித்து பறிமாறவும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *