பரோட்டா & சிக்கன் சால்னா / Parota Chicken Salna

2016-12-05
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

பரோட்டா & சிக்கன் சால்னா

#Kayal_Samayal# #Parota_Chicken_Salna#

#தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

மைதா – 2 கப்

சீனி – 1 tsp

உப்பு – தேவைக்கு

தயிர் – 2 tblsp

மிதமான சுடு தண்ணீர் – தேவைக்கு

#செய்முறை:
paratha-salana
More recipes please visit www.kayalsamayal.com

1. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மாவு பிணைந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பின் நன்கு வளர்த்து, அதன் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி, மைதா தூவி, விசிறி போல் மடித்து, கட்டை கொண்டு மேல் புறம் லேசாக தேய்த்து, பேனில் சுட்டு எடுத்து, கைகளைக் கொண்டு லேசாக தட்டி வைத்தால் சுவையான பரோட்டா தயார்.

#சிக்கன்_சால்னா:

#தேவையான_பொருட்கள்:

எண்ணெய் – தேவைக்கு

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – கொஞ்சம்

எலும்பு சேர்ந்த சிக்கன் – 100 கிராம் (தேவைக்கு)

#வறுத்து_அரைக்க_தேவையான_பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

மிளகு – 1 tsp

மல்லி – 1 tblsp

சோம்பு – 1 tblsp

சீரகம் – 1/2 tblsp

பட்டை – 2 இன்ச்

முந்திரி – 6

#செய்முறை:

இவை அனைத்தையும் வெறும் சட்டியில் போட்டு வறுத்து,

எண்ணெய் – தேவைக்கு

வெங்காயம் – 1

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 6 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1

புதினா & மல்லி இலை – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1/2 tsp

வத்தல் தூள் – 1 tsp (தேவைக்கு)

தேங்காய் – 2 tblsp

#செய்முறை:

வறுத்த பொருளுடன் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மல்லி இலை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், வத்தல் தூள் சேர்த்து, கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்து, ஆர வைத்து பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

#சால்னா_செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

1. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் சிக்கன் சேர்த்து நன்கு ஃப்ரை செய்து, அரைத்து வைத்த பேஸ்ட், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

சுவையான பரோட்டா மற்றும் சால்னா தயார்.

#டிப்ஸ்:

1. சிக்கனுக்கு பதிலாக உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி போன்ற நமக்கு பிடித்தமான காய்கறிகள் சேர்த்தும் சால்னா செய்யலாம்.

இந்த ரெசிபியை
நமக்காக செய்து அனுப்பியவர்

HalimaKadSul – Dubai

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *