நாசி லெமாக் / Nasi lemak

2016-01-19
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

நாசி லெமாக் (தேங்காய் சோறு & நெத்திலி கருவாடு சம்பல்)

சமையல் பற்றிய சிறுவிளக்கம் –

Nasilemak

நாசி லெமாக் ஒரு இஸ்லாமிய பாரம்பரிய உணவு. இது தேங்காய் பால் மற்றும் பன்டான் இலையில் சமைத்த ஒரு மலாய் டிஷ்.

இது மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா சுமத்ரா மற்றும் புரூனே நாட்டில் தேசிய உணவாக கருதப்படுகிறது,

PhotoGrid_1451380568241

தேவையான பொருட்கள் (தேங்காய் சோறு) :
2 கப் பொன்னி அரிசி
1 1/2 கப் தேங்காய் பால்
2 1/2 கப் தண்ணீர்
3 பன்டான் இலைகள் – முடிச்சு போட்டு
3 இஞ்சி துண்டுகள்
2 சிறய வெங்காயம் (சிறிதாக நறுக்கவும்)
தேவையான அளவு உப்பு

PhotoGrid_1451382023926

தேவையான பொருட்கள் (நெத்திலி கருவாடு சம்பல்):
2 கப் நெத்திலி கருவாடு
15 காய்ந்த மிளகாய்
3 பெரிய வெங்காயம் (வட்ட வடிவில் நறுக்கவும்)
7 சிறய வெங்காயம்
2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 தேக்கரண்டி சர்க்கரை
1/2 கப் புளி தண்ணீர்
தேவையான அளவு தண்ணீர்
1/2 கப் எண்ணெய் தாளிக்க
உப்பு

PhotoGrid_1451380687064

நாசி லெமாக் செய்ய

1) அரிசி பல முறை கழுவ வேண்டும். அதில் தேங்காய் பால், சிறய வெங்காயம், உப்பு, தண்ணீர், இஞ்சி மற்றும் பன்டான் இலைகள் சேர்க்கவும்.

2) இதை அப்படியே ரைஸ் குக்கரில் வேக வைக்கவும் அல்லது தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும்

.Nasilemak

நெத்திலி கருவாடு சம்பல் செய்ய

1) முதலில் காய்ந்த மிளகாயை கட் பன்னி சுடு தண்ணீரில் ஊர வைக்கவும்.

2) ஊர வைத்த காய்ந்த மிளகாயை, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிய வெங்காயத்துடன் மிக்ஸியில் அரைக்கவும்.

3) அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயத்தை தாளிக்கவும், அதில் நெத்திலி கருவாடு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, அரைத்த காய்ந்த மிளகாய் பேஸ்ட் சேரத்து எண்ணெய் கக்கும் வரை கொதிக்க விடவும்.

4) இதில், புளி தண்ணீர், சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, அதன் பின்னர் மூடி குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும்.

5) சம்பல் சிவப்பு நிர கலராக மாறும் வரை வேக வைக்கவும்

குறிப்பு – பாஸ்மதி அரிசியில் செய்தால், சமைக்கும்  முன் சுமார் 20 நிமிடங்கள் அரிசியை ஊற வைக்கவும். தண்ணீர் அளவை பாஸ்மதி அரிசி க்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ளவும். இதனுடன், அவித்த முட்டை, வெள்ளரிக்காய், பாெரித்த வேர்கடலை, மற்றும் பொரித்த நெத்திலி கருவாடு சேர்த்து பரிமாறவும்

சமைக்கும் நேரம்: 45 மணி நேரம்

பரிமாறும் அளவு: 5 பேர்

ஆயிஷா அப்துல் ஜபார்

மலேஷியா

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *