நார்த்தங்காய் ஊறுகாய் / narthangai pickle

2016-02-09
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
நார்த்தங்காய் ஊறுகாய் :-
 
ஊறுகாய் என்ற பெயரைக் கேட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நா ஊறும். புளிப்பு, உப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உள்ளடக்கியது. எல்லா நரம்புகளையும் சுண்டி இழுக்கக்கூடியது. இவ்வாறு எல்லா சுவையையும் உடையதாலேயே அதிகம் சாப்பிட கூடாது. உடலுக்கு அவ்வளவு உகந்ததல்ல.ரெடிமேட்களில் கிடைக்கும் ஊறுகாய்களில் எதையும் கட்டுபடுத்த முடியாது. நம் ஊறுகாய் ஆசையைதான் கட்டுப்படுத்த வேண்டும். நம் முன்னோர்களைப் போல் நாமும் வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்தால்……..நம் தேவைக்கேற்ப உப்பு,காரம் கட்டுப்படுத்தலாம். நாமும் ஆசை தீர சாப்பிடலாம்.
 
காயலில் பாரம்பரியமாகவே நார்த்தங்காய் ஊறுகாய் வீட்டிலேயே செய்வார்கள். சிலர் வீட்டில் தயாரித்து விற்பனை செய்வார்கள். நோன்பு காலங்களில் சஹர் சாப்பாட்டிற்கு அனைவரும் ஊறுகாய் விரும்புவர். எனவே காயலில் அனேக வீடுகளில் நோன்பு நெருங்கும் போதே நார்த்தங்காய் ஊறுகாய் செய்து ஸ்டாக் வைத்துக் கொள்வார்கள். எல்லா ஊர்களிலும் ஊறுகாய் செய்வார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டைல்.
 
narthangai pickle
இது காயல் ஸ்டைல் நார்த்தங்காய் ஊறுகாய்.
 
IMG_20160204_123610
தேவையான பொருட்கள்:-
 
நார்த்தங்காய் – 2 சற்று பெரியது
வினிகர் -200 – 250 ml
கல் உப்பு (அ) தூள் உப்பு – தேவைக்கு
 
காய்கறிகள் (விருப்பப்பட்டால் )
 
காரட் – 1பெரியது
கொத்தவரங்காய் – 6-7 (குச்சிக்கா)
நெல்லிக்காய் – 2-3
ப.மிளகாய் -2
வெள்ளை கொண்டைக்கடலை -கொஞ்சம்
 
narthangai pickle
தாளிக்க:-
 
நல்லெண்ணெய் (அ) சமையல் எண்ணெய் – 300 ml
கடுகு -கொஞ்சம்
கறிவேப்பிலை- சிறிய கொத்து
வெள்ளைப்பூண்டு – 10-15 பல்
காய்ந்த மிளகாய் – 5
காயல் கீரைப் பொடி – 25 – 50 கிராம்
 
செய்முறை :-
 
நார்த்தங்காயை தனியாக வேகவைத்து எடுக்கவும்.குறைந்தது 15 நிமிடங்கள் வேக விடவும்.வெந்த நார்த்தங்காயை சிறு துண்டுகளாக்கி கொட்டைகளை நீக்கி ஒரு டப்பாவில் போட்டு ல் உப்பு,வினிகர் ஊத்தவும்.
 
காய்கறிகளை கொஞ்சம் சிறு துண்டுகளாக்கி ஆவியில் வேக விடவும்.கொண்டைக்கடலை சேர்த்தால் முன்னரே 5 – 6 மணி நேரம் ஊற வைக்கவும்.வெந்த காய்களை ஒரு சுத்தமான உலர் துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வாட விட்டு நார்த்தங்காய் டப்பாவில் போட்டு நன்கு குலுக்கவும்.
 
இந்த டப்பாவை 2 – 3 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்கவும்.அவ்வபோது நன்கு குலுக்கி விடவும்.வினிகரோடு காய்கள் நன்கு சேர்ந்ததும் தாளிக்கக் கொடுத்த பொருட்களை ரெடியாக வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் மற்றப் பொருட்களைப் போட்டு தாளித்து இறுதியில் கீரைப்பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.இந்த தாளிப்புடன் ஊறுகாய் சேர்த்து கிளறவும்.
 
காயல் கீரைப்பொடி :-
 
கீரை பொடி என்பது காயலில் அனேக வீடுகளில் செய்யப்படும்…ஒரு வகை மசாலா பொடி…அனைத்து காய்கறி பொறியல்,கூட்டு,அடக்கம்,ஊறுகாய் இவற்றிற்கு காரத்திற்காக சேர்ப்பார்கள்.மணமாகவும் இருக்கும்.
 
சிவப்பு வத்தல் -¼Kg
சீரகம்-25gm
சோம்பு -25gm
 
வெறும் வாணலியில் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும்.கீரைப்பொடி தயார்.
 
குறிப்பு:-
 
ஊறுகாயில் சொட்டுத் தண்ணீர் கூட சேரக்கூடாது.எனவே காய்கள் உலர்ந்த பிறகே சேர்க்க வேண்டும்.தாளித்த பின் ஊறுகாய் சூடாக இருந்தால் மூட வேண்டாம்.எடுத்து வைக்கும் டப்பாக்களும் உலர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
 
ஹலீமுன்னிஸா.,
பெங்களூர்.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Recipe Comments

Comment (1)

 1. posted by Sheerin on July 28, 2016

  Narthangayayaum veaha vaitha pin kaaya vaithu dan salt um vinegar um serka vaenduma?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *