மட்டன் சுக்கா /mutton sukka

2016-01-21
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
 
மட்டன் சுக்கா
 
விளக்கம்-
 
கறி சுக்கா முக்கியமாக ஹஜ் பெருநாள் நாட்களில் செய்வது வழக்கம். பாரம்பரிய சமையல்களில் இதுவும் ஒன்று. முந்நாட்களில் ஃப்ரிட்ஜ் வசதி இல்லாததால் கறி அதிகமாக இருக்கும் நாட்களில் இப்படி சுக்காவை செய்து வைப்பார்கள். சுவையாக இருக்கும். பயணத்தின் பொழுதும் இதனை போல் செய்து எடுத்து போகலாம்.
 
மட்டன் சுக்கா
 
தேவையான பொருட்கள்
 
மட்டன் (அ) பீஃப்-1/2 கி
பல்லாரி-2
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள்-4 டீஸ்பூன்
மிளகு தூள்-3 டீஸ்பூன்
சீரக தூள்-3 டீஸ்பூன்
சோம்பு தூள்- 2 டீஸ்பூன்
பட்டை-1 நீள துன்டு
கிராம்பு-2
ஏலக்காய்- 3-4
எண்ணெய், நெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
முழு மிளகு- 2 ஸ்பூன்
சீரகம்- 2 ஸ்பூன்
 
செய்முறை:
 
முதலில் கறியுடன் கொஞ்சம் இஞ்சி பூண்டு விழுது, வத்தல் தூள், உப்பு சேர்த்து 1/2 முதல் 1 மணி நேரம் வரை ஊர வைக்கவும்.
 
குக்கரை சூடு படுத்தி காய வைக்கவும். பின் ஒரு பாதி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறியை சேர்த்து 2 விசில் வரும்வரை அரை வேக்காடிற்கு வேகவிடவும்.
 
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலம் கருவா சேர்த்து, இஞ்சி பூன்டு சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய பல்லாரி சேர்த்து நன்றாக வேக விடவும். பின்பு கறியை சேர்த்து வத்தல் தூள், சோம்பு தூள், மிளகு தூள் சீரக தூள் சேர்த்து வேக விடவும். கறியில் நிற்கும் தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லாமல் வரும் சமையம் முழு மிளகு மற்றும் சீரகத்தை லேசாக வருத்து பொடி செய்து கறியுடன் தட்டி பிரட்டி விட்டு இறக்கவும். சுவையான சுக்கா தயார்.
 
Mutton sukka
குறிப்பு:
 
சுக்காவிற்கு தண்ணீர் சேர்த்து வேக விடக் கூடாது. கறியை குக்கரில் முதலில் வேக விடுவதால் தண்ணீர் ஊரும். அடி பிடிப்பது போல் இருந்தால் கொஞ்சம்
தண்ணீர் சேர்க்கலாம்.
 
இந்த சுக்கா 4-5 நாட்கள் வரை கெட்டு போகாது. தினமும் கொஞ்சம் சூடு காட்டி வைக்கவும்.
 
சமைக்கும் நேரம்- 2 மணி நேரம்.
 
அதபியா பாசித்
 
உடன்குடி
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *