ஆட்டு முள்ளு சூப் / mutton mullu soup

2015-03-27
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

தேவையான பொருட்கள்:
இறைச்சி கழுத்து எழும்பு —500 கிராம்
தக்காளி –3 சிறியது
மஞ்சள் தூள்–3/4 டேபிள் ஸ்பூன்
சீரகம்—1 டேபிள் ஸ்பூன்
மிளகு–2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது–1 டேபிள் ஸ்பூன்
பட்டை–1 துண்டு
ஏலக்காய் –3
கிராம்பு –2
வெண்டைக்காய்–4
கேரட் 1
பல்லாரி வெங்காயம் –1 சிறியது
கறிவேப்பிலை — தேவைக்கு
உப்பு –தேவைக்கு
பாதம் பவுடர் –3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஸ்டெப் 1
முதலில் மிளகு , சீரகம் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
ஸ்டெப் 2
ஒரு பேனில் 1 டீ ஸ்பூன் ஆயில் விட்டு வெண்டைக்காயை கீறி விட்டு பேனில் போட்டு லேசாக வதக்கி வைக்கவும்
ஸ்டெப் 3
வெங்காயத்தையும், தக்காளியையும் சின்னதாக நறுக்கி வைக்கவும்
ஸ்டெப் 4
பிரஸ்ஷர் குக்கரில் இறைச்சி முள்ளு போட்டு அதில் மஞ்சள்தூள், காயல் மசாலா தூள் , தக்காளி 2 கப் தண்ணீர் , உப்பு போட்டு நன்றாக வேக வைக்கவும்
ஸ்டெப் 5
குக்கரை திரந்து பார்த்து முள்ளு நன்றாக வெந்ததும் அரைத்த மிளகு சீரகத்தை போடவும்
ஸ்டெப் 6
பிறகு வதக்கிய வெண்டைக்காய், கட்பண்ணின கேரட்டை போடவும் . பின் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்
ஸ்டெப் 7
பிறகு பாதம் பவுடர் சேர்த்து லேசாக வேக விடவும்
ஸ்டெப் 8
வேறு ஒறு கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, எலம், கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் . பச்சை வாசனை போகும் வரும் வரை தாளிக்கவும் நன்றாக முறுகி வரும் போது அடுப்பை ஆப் பண்ணவும்.
ஸ்டெப் 8
பிறகு தாளிப்பை வேக வைத்த சூப்பில் ஊற்றவும்
இதை சப்பாத்தி, பரோட்டா, சோறு க்கு சாப்பிடலாம்
ஸ்டெப் 9
சுவையான லேம்ப் கழுத்து சூப் ரெடி
மீரா அபு – லண்டன்

 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Recipe Comments

Comment (1)

 1. posted by abu on April 2, 2015

  very tasty

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *