ஆட்டுறைச்சி எலும்பு மிளகு சூப்/ Mutton bone pepper soup

2016-05-06
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
ஆரோக்கியமான மட்டன் எலும்பு மிளகு சூப்.


ஹோட்டலுக்கு போனால் முதலில் ஆர்டர் செய்வது சூப்.. ஆம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று விரும்பி சாப்பிடுவது சூப் தான்.. ஆரோகியம், உடல் நலத்துக்கு நல்லது என்று நாம் சூப் சாப்பிடுகிறோம்.

ஆனால், நாம் ஆரோக்கியம் என்று நினைத்து குடித்துக்கொண்டிருக்கும்#கடைகளில் வாங்கும் சூப் வகைகளில், உண்மை யாகவே ஆரோக்கியம் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பாக, பெரும்பாலான ஹோட்டல், தெரு ஓர கடைகளில் விற்கப்படும் சூப்களில் சுவைக்காக சேர்க்கப்படும் சில இரசாயனப் பொருட் கள், ஆரோக்கியத்தைவிட, எதிர் விளைவுகளையே அதிகம் தருவதாக இருக்கின்றன. ஆகையால் முடிந்த வரை ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலே பிரியமானவர்களுக்கு நீங்களே தயார் செய்து கொடுங்கள்.

எளிய முறையில் மட்டன் எலும்பு சூப் எப்படி செய்வது என்று இன்று பார்க்கலாம்.
mutton bone soup

தேவையான பொருட்கள்:

ஆட்டுறைச்சி எலும்பு – 250கிராம்
தக்காளி – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி/ புதினா – வாசனைக்கு சிறுது
உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பட்டர் – ஒரு மே.கரண்டி

வறுத்து அரைக்க:

சிகப்பு மிளகாய் – 3
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் -2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
தனியா – 1டீஸ்பூன்
கடலைபருப்பு – 1/2 டீஸ்பூன்
பல்லாரி வெங்காயம் – 1/2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பூண்டு – 6பல்

mutton bone soup
செய்முறை:

கடாயில் மேலே வறுக்க கொடுத்த பொருட்களை கருக விடாமல் வறுத்து, ஆறிய பிறகு சிறுது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து எடுக்கவும்.

மட்டன் எலும்பு துண்டுகளை அலசி குக்கரில் மஞ்சள்தூள் , பட்டர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 4- 5 வீசில் மட்டன் எலும்பு வேகும் வரை வேக வைக்கவும்.

நன்றாக விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி , புதினா, தேவைக்கு உப்பு மற்றும் அரைத்து எடுத்த கலவையினை சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் அடுப்பினை ஆன் செய்து தேவைக்கு 2-3 கப் தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மட்டன் எலும்பு மிளகு சூப் ரெடி

குறிப்பு:

More recipes please visit www.kayalsamayal.com

எலும்புடன் கொழுப்பு சேர்ந்த இறைச்சியில் சுவை அதிகமாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு கொழுப்புடன் கொடுக்கலாம். பெரியவர்கள்/ வயதானவர்கள் கொழுப்பினை சேர்க்க வேண்டாம்.

கொழுப்புடன் சேர்ந்த எலும்பு துண்டுகளாக இருந்தால் பட்டர் சேர்க்க வேண்டாம்.

மசாலா பொருட்களை ஃபிரெஷ் ஆக செய்தால் ருசி அதிகம். தினமும் சூப் செய்வதாக இருந்தால் வெங்காயம் , இஞ்சி பூண்டு சேர்க்கமல் மற்ற பொருட்களை சேர்த்து அரைத்து காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைத்து தேவைக்கு பயன்படுத்தலாம்.

புதினா விரும்பனால் இரண்டு இலை சேர்க்கலாம்.

மிளகு சேர்ப்பதால் 1 வயது குழந்தைகளுக்கு கூட இந்த சூப் கொடுக்கலாம்.

சிறு குழந்தைகளுக்கு சூப் செய்யும் பொழுது காரம் குறைத்துக்கொள்ளவும்.

ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள், உடலுக்கு நல்லது. சூப், நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரி மானம் சரிவர நடக்கும். அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும். ஆகையல் தினமும் ஒரு வகை சூப் காலை 11 மணி போல் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது.

 
 
Average Member Rating

(3 / 5)

3 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *