முர்தபா/ Mutabak

2016-01-20
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
1
 
தேவையானவை :
 
 கோதுமை – ½ கிலோ
 சிக்கன் – 200 கிராம்
 பட்டாணி – 100 கிராம்
 வெங்காயம் – ¼ கிலோ
 முட்டை – 8
 கோஸ் – 100 கிராம்
 கேரட் – 50 கிராம்
 கருவாப்பிலை – 1 கொத்து
 மல்லி இலை – 1 கொத்து
 மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
 எண்ணெய் – 3 டீ ஸ்பூன்
 கீரைப்பொடி – 2 டீ ஸ்பூன்
 துருவிய தேங்காய் – 1 கப்
 உப்பு – தேவையான அளவு
 
 
2
செய்முறை விளக்கம் :
 
 கோதுமையை கொஞ்சம் எண்ணெய்,உப்பு,தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு ஒன்று போல் நன்கு சேர்க்கவும். அரை கிலோ கோதுமைக்கு 15 ரொட்டிகள் வரும்.
 
 சிக்கனை தயிர், இஞ்சி பூண்டு,மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.
 
 பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி,உப்பு,வெட்டிய வெங்காயம், கோஸ்,கேரட்,பட்டாணி,கருவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
 
 
 வெங்காயம் வதங்கிய பிறகு மல்லி இலை, துருவிய தேங்காய் இவைகளை போட்டு கிளறி விடவும்.
 
 தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு கீரைப்பொடியை போட்டு கிளறி விட்டு இறக்கவும்.
 
3
 அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீ ஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.
 
 பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு,முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.
 
செய்முறை - 3
 ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் கலியாவை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.
 
 பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக பொரித்து எடுக்கவும்.
 
சமைக்கும் நேரம்: 2 மணி நேரம்.
பரிமாரும் அளவு: 5 நபர்கள் சாப்பிடலாம்.
 
Mutabak
கூடுதல் டிப்ஸ்:
 
மைதாவில் முர்தபா செய்தால் பார்க்க அழகாக இருககும்.ஆனால் உடலுக்கு கெடு. முடிந்த அளவிற்கு மைதாவை நாம் தவிர்ப்பது நல்லது. காய்கறிகள் என்றாலே பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுடன், அவர்களுக்கு தேவையான நார்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்.
 
குறிப்பு:
 
ஹஜ் பெருநாள் காலங்களில் குர்பானி கறிகள் வந்து நிறைய இருக்கும் அப்பொழுது இதனைபோல் செய்து வைக்கலாம். இதுபோல் ஏதாவது முக்கிய விசேஷம் வந்தால் இஸ்லாமிய வீடுகளில் நிச்சயம் அதில் முர்தபா இடம் பெரும்.
 
 
முஹம்மது மீரா,
காயல்பட்டினம்.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *