மெக்சிகன் டாகோஸ்/Mexican Tacos

2016-01-13
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

டாகோஸ் பூரி செய்ய :-

மைதா -1 கப்
சோள மாவு -1 கப்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க தேவைக்க

எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரி போல மெலிதாக தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பூரிகளாக பொரித்தெடுக்கவும். பூரியை சமமாக மடிக்காமல் நடுவில் கொஞ்சம் அகலமாக இறுக்குமாறு படகு வடிவத்தில் மடித்துக் கொள்ளவும்.( Oven grill rack ல் 2கம்பிகள் சேர்த்து பூரியை போட்டு எடுக்கலாம்.படகு வடிவம் கிடைக்கும். )
அனைத்து பூரிகளையும் இவ்வாறு செய்து டப்பாக்களில் வைக்கவும்.

அடக்கம் செய்ய:-

ராஜ்மா (கிட்னி பீன்ஸ்)- 1 கப்
வெங்காயம் -2 பெரியது
தக்காளி – 1 பெரியது
குடைமிளகாய்-கொஞ்சம்
ஸ்பிரிங் ஆனியன்- கொஞ்சம்
மிளகாய் தூள் – 1
கரம் மசாலா தூள்- ½
உப்பு -தேவைக்கு
எண்ணெய் – கொஞ்சம்

IMG_20151213_121701

ராஜ்மாவை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலையில் வடித்து,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள் ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் உப்பு,மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கியதும் தக்காளி,குடைமிளகாய் ,ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்கு வதக்கியதும் வேக வைத்த ராஜ்மாவை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைத்து மசித்து இறக்கவும்.

டாகோஸ் செய்முறை :-
வெங்காயம்.,தக்காளி,முட்டைக்கோசு,கொ.மல்லி இலை ஆகியவற்றை மெல்லிய நீளமாக வெட்டி தனித்தனியே வைக்கவும்.

டாகோஸ் பூரியை எடுத்து வெங்காயம்,முட்டைகோசு சிறிது தூவி ராஜ்மா கலவையை சிறிது வைக்கவும்.

அதன் மேல் நறுக்கிய வெங்காயம்,தக்காளி தூவவும்.விருப்பப்பட்டால் சாஸ் தூவலாம். இறுதியில் முட்டைக்கோசு,கொ.மல்லி இலை தூவவும்.இதேபோல் மற்ற டாகோஸ் செய்து சாஸுடன் சூடாக பரிமாறவும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *