வடுமாங்காய்/ மாவடு / mavadu

2016-04-17
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
இப்ப கோடை கால ஆரம்பம் என்பதால் மாவடு நிறைய கிடைக்கும். இதனை கொஞ்சம் உப்பு , மிளகாய்ல ஊற வைத்து மாவடு செய்து வைத்தால் வருட முழுவதும் பயன்படுத்தலாம்..#வடுமாங்காய்_மாவடு

தேவையான பொருட்கள்:

வடுமாங்காய் – 3 கப்
மிளகாய்தூள் – 3 மே.கரண்டி மஞ்சள்தூள் – ஒரு மே.கரண்டி
கடுகு – 3டீஸ்பூன்
தூள் உப்பு தேவையான அளவு

 

vadu mangai

செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

வடுமாங்கையை அலசி , துணி அல்லது கிட்சன் டிஸ்யூ வைத்து ஈரமில்லாமல் துடைத்து அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி வைக்கவும்.

இதனுடன் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பீங்கான் ஜாடி அல்லது பெரிய கண்ணாடி பாட்டில் அல்லது மண் சட்டியில் போட்டு மூடவும்.

ஜாடியை நன்றாக குலுக்கி விடவும்.

மறுநாள் ஜாடியை திறந்து பார்த்தால் நீர் விட்டிருக்கும்.

தினமும் 2 முறை ஜாடியை குலுக்கி விட்டவும்.

அடிக்கடி குலுக்கி விடுவதால் 3 நாட்களில் நிறைய நீர்விட்டு மாங்காய் நீரில் ஊறி விடும்.

சில நாட்களிலே நன்றாக மாங்காய் ஊறிவிடும். நன்றாக ஊறிய பிறகு தேவைக்கு பயன்படுத்தலாம்.

குறிப்பு:

More recipes please visit www.kayalsamayal.com

இந்த மாவடு ஜாடியை நேரடியாக வெயிலில் வைக்கனும் என்று அவசியமில்லை.

வெளிச்சம் படும்படியான இடத்தில் வைத்தாலே போதும். கட்டாயம் அடிக்கடி குலுக்கி விடவும்.

இந்த வெயில் காலத்தில் தயிர் சாதத்துடன் வடுமாங்காயை தொட்டு சாப்பிட்டால் அட…டா என்னா சுவை என்னா சுவை…

பாத்திமா நாச்சி – காயல்பட்டினம்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *