ஆந்திரா ஆவக்கா ஊறுகாய்/Mango Pickle

2016-04-09
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ஆந்திரா ஆவக்கா [ மாங்காய் ] ஊறுகாய்

More recipes please visit www.kayalsamayal.com

தேவையானவை :
மாங்காய் – 6 [ பெரியது ]
வெள்ளை பூண்டு – 6 [ முழு பூண்டு ]
வெந்தயம் – 4 டீ ஸ்பூன்
தனி மசாலா – 1 கப்
கடுகு – 3 டீ ஸ்பூன்
சீரகம் – 3 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் – 200 கிராம்
சீரகம் – 2 டீ ஸ்பூன்
கடுகு – 2 டீ ஸ்பூன்
வத்தல் – 7
வெள்ளை பூண்டு – 1 [ முழு பூண்டு ]

mango pickle

செய்முறை விளக்கம் :

மாங்காயை சிறுதுண்டுகளாக வெட்டவும்.

தண்ணீர் இல்லாமல் காட்டன் துணியைக்கொண்டு நன்கு துடைக்கவும்.

வெள்ளை பூண்டை தோல் எடுக்காமல் மத்தை வைத்து நன்கு தட்டிக்கொள்ளவும்.

கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் இவைகளை கொஞ்சம் வருத்து, மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் மாங்காயை போட்டு அதில் உப்பு, தனி மசாலா போட்டு நன்கு கிளரி விடவும்.

பிறகு தூள் செய்த கடுகு,வெந்தயம், சீரகம் இவைகளை போட்டு கிளரவும்.

பிறகு நன்கு தட்டிவைத்த வெள்ளை பூண்டையும் அதனுடன் சேர்த்து கிளரவும்.

பின்பு இவைகளை ஒரு ஜாடியில் போட்டு காற்று ஏறாத அளவிற்கு கவர் போட்டு, கயிறு கொண்டு இறுக்கி கட்டி வைக்கவும்.

மூன்று நாட்கள் கழித்து அதை ஓபன் பண்ணவும்.

மாங்காய் நன்கு இத்து இருக்கும்.

தாளிக்க வெள்ளை பூண்டை பொடிதாக கட் பண்ணவும்.
வத்தலை கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி,கடுகை போட்டு, கடுகு நன்கு வெடித்ததும் சீரகம், வத்தல் போடவும்.
பிறகு வெள்ளை பூண்டு போட்டு, பூண்டு பொரிந்ததும் நன்கு ஆறவைத்து தாளிப்பை ஊறுகாயில் இட்டு கிளரவும்.

சமைக்கும் நேரம்: 20 நிமிடம்.
தாழிக்க : 10 நிமிடம்.

குறிப்பு:
எல்லா உணவுகளையும் பாதுகாப்பதற்கு நம் முன்னோர்கள் ஊறுகாவையே பயன்படுத்தினர்.
ஊறுகாவாய் தயாரிப்பதால் அந்த உணவு நீண்ட காலம் உபயோகிக்கப்படும். முதன் முதலில் வெள்ளரிக்காயில்தான் ஊறுகாய் தயாரித்தார்கள். ஏனென்றால் தக்காளி,காரட் போன்ற மற்ற காய்கறிகளைவிட வெள்ளரிக்காயில் nutrition அளவு கம்மியாகவே இருந்தது.
ஆனால் அதே வெள்ளரிக்காயில் ஊறுகாய் செய்தால் அதிகமாக sodium சத்து காணப்பட்டது. எந்த பொருளிலும் ஊறுகாய் செய்யலாம் .ஆனால் உலக அளவில் ஊறுகாய் மிகவும் பிரபல்யமானது ஆந்திரா ஆவக்கா ஊறுகாய்.
ஆந்திராவில் மாங்காய் ஊறுகாய்தான் ஊறுகாயின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
ஆந்திராவில் செய்யப்படும் அனைத்து பாரம்பரிய உணவுகளுடன் ஊறுகாயும் முதன்மையாக இடம் பெரும்.
தயிரும் ஊறுகாயும் இல்லாமல் சாப்பாடே இல்லை என்று சொல்லலாம்.
ஆந்திரா ஊறுகாயிலும் பலவகைகள் இருந்தாலும் ஆந்திரா மக்கள் விரும்பி சாப்பிடுவது மாங்காய் ஊறுகாய்தான்.
நாம் நெய்ச்சோறு, சேமியா,வடை போன்ற எல்லா உணவுகளுடன் ஊறுகாய் தொட்டு சாப்பிட்டாலும், அந்த காலத்தில் சாதம் வடித்த கஞ்சியும் ஆந்திரா ஊறுகாயும் சேர்த்து குடித்த சந்தோஷம் இன்றைய காலத்துமக்கள் அறியாததே.

கூடுதல் குறிப்பு :
வெள்ளை பூண்டு கொஞ்சம் அதிகமாகவே போடவேண்டும்.
தனி மசாலாவும், உப்பும் அதிகமான அளவு எடுத்துக்கொண்டால்தான், ஊறுகாய் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
எப்பவும் எந்த சமையலிலும் கடுகு தாளிப்பாக இருந்தால் கடுகை முதலில் போட்டு நன்கு வெடிக்கவிட்ட பிறகே மற்ற பொருட்களை போடவேண்டும்.
கடுகு நன்கு வெடிக்கவில்லையென்றால், சாப்பிடும்போது கசப்பது மட்டும் இல்லாமல் கால் வலியும் ஏற்படும்.

முஹம்மது மீரா PNS,
காயல்பட்டினம்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *