மாலு பான்/ malu bun

2016-03-07
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
குறிப்பு : இது ஒரு இலங்கை பன் பண்டம்.  மால் என்றால் மீன். பான் என்றால் பன்.
 
தேவையான பொருள்கள் :
 
மைதா மாவு  – 200 கிராம்
சர்க்கரை – 1 tsp.
உப்பு – 1 tsp.
பேக்கிங் பவுடர்  – 1/2 tsp.
ஈஸ்ட் – 1 tsp. (ட்ரை)
பால் – 30 மி.லி.
பட்டர் – 30 கி.
மிதமான சுடு தண்ணீர் – 1/4 கப்.
 
அடக்கம் செய்ய :
 
மீன் & சிக்கன் & வெஜ் அடக்கம் வைக்கலாம். நான் சிக்கன் வைத்தேன்.
 
சிக்கன் – 250 கிராம்.
வெங்காயம் – 2.
இ.பூண்டு விழுது  – 1 tbsp.
மஞ்சள் தூள்  – 1/4 tsp.
வத்தல் தூள்  – 3/4 tsp.
உப்பு – தேவைக்கு.
கொ.மல்லி இலை  – தேவைக்கு
 ———————–
முட்டை – 1 ( பன் மேல் தடவ)
 
malu
செய்முறை :
 
முதலில் ஈஸ்ட்வுடன் சரக்கரை சேர்த்து 1 tsp தண்ணீர்  சேர்த்து 2 mins வைக்கவும்.
 
பின் மைதா,  பேக்கிங் பவுடர்,  உப்பு,  பட்டர் இவற்றை சேர்த்து பிசையவும்.
 
பின் ஈஸ்ட் கலவையில் 30 ml மிதமான சுடு நீர் சேர்த்து நன்கு கலந்து  10 நிமிடம் ஊற விடவும்.
 
பின் ஈஸ்ட் கலவையை சேர்த்து பிசையவும் பின் பாலை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து ரொட்டி மாவு பதத்திற்கு வந்ததும் 2 மணி நேரம் மூடி போட்டு  பொங்க விடவும்.
 
அடக்கம் செய்முறை :
 
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு நன்கு வேக விடவும்.
 
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமானதும் இ.பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 
பின் மசாலா பொருள்கள், தாளிப்புக்கு தேவையான உப்பு  சேர்த்து பிரட்டி சிக்கனை போட்டு  வதக்கி கொ.மல்லி இலை தூவி இறக்கவும்.
 
பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி பலகையில் வளர்த்து  நடுவில் அடக்கம் வைத்து முக்கோணமாக மடித்து அதன் மேல் முட்டை தடவி சூடாக்கப்பட்ட ஓவனில் 180c ல் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.  சுவையான மாலு பான் ரெடி.
 
டிப்ஸ் : பன் வகை என்பதால் சூடு ஆரிய பின் சாப்பிடவும்.  சூடு குறைய குறைய பன் நன்கு மிருதுவாக இருக்கும். சுவையாக இருக்கும்.
 
ஜுல்ஃபா ஹூசைன் – காயல்.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *