ஆட்டு நுரையீரல் கிரேவி / liver gravy

2016-11-01
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ஈரல் கிரேவி

For more recipes please visitwww.kayalsamayal.com

தேவையான பொருட்கள்:
ஆட்டு நுரையீரல் / ஈரல் – 250 கிராம்
தக்காளி 2
வெங்காயம் -1
தயிர் 2 மே.கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1மேகரண்டி
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பச்சமிளகாய் 1
உப்பு தேவைக்கு
எண்ணெய் தேவைக்கு
திக்கான தேங்காய் தலை பால் பாதி மூடி.

liver-gravy


செய்முறை:

For more recipes please visitwww.kayalsamayal.com

ஈரல் / நுரையீரலை நன்றாக அலசி சுத்தம் செய்து அதனுடன் 1/2ஸ்பூன் தயிர் அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது , ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக விரவி 10நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு கறிவேப்பிலை, பச்சமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய தக்காளி தேவைக்கு சிறுது உப்பு மீதியிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்ச வாடை போகும் வரை வதக்கவும்.

பின்பு தயிர் அதனுடன் விரவி வைத்த ஈரல் /நுரையீரல் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தேவைக்கு சிறுது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

பாதி வெந்த பின்பு அதில் எடுத்து வைத்த தேங்காய் பால் ஊற்றி மீண்டும் வேக வைக்கவும்.

நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பினை ஆப் செய்யவும்.

விரும்பினால் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சுவையான ஈரல் கிரேவி தயார்

ராஃபியா சித்தீக்

For more recipes please visitwww.kayalsamayal.com

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *