கொள்ளு சமையல் / Kollu samayal

2015-03-31
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

கொள்ளு சுண்டல்

தேவையான பொருட்கள்
 
கொள்ளு – 2 கப்
வெங்காயம் – 1
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
உளுந்து – அரை தேக்கரண்டி
கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவைக்கு
உப்பு – தேவைக்கு

செய்முறை
வெங்காயத்தை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த கொள்ளை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு உப்பு கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் வேக வைத்த கொள்ளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
கொள்ளை சேர்த்து நன்கு கிளறியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி எடுக்கவும்.

சுவையான கொள்ளு சுண்டல் தயார். இதில் முளைக்கட்டிய கொள்ளும் பயன்படுத்தலாம். விரும்பினால் தாளிக்கும் போது பெருங்காயம் சேர்க்கலாம். கொள்ளை வேக வைத்து வடித்த நீரில் ரசம் செய்யலாம்.

கொள்ளு சட்னி

தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 1 டேபிள்
ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!

கத்தரிக்காய் தொக்கு
தேவையானவை:
கத்தரிக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/4 tsp
உப்பு – தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் – 3 tsp
கடுகு – 1/4 tsp
உளுத்தம்பருப்பு – 1/2 tsp
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 1 பின்ச்
காய்ந்த மிளகாய் – 2

அலங்கரிக்க:
கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை:
ஒரு கடாயில் தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து கொள்ளவும்.
அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழைய வேக விடவும்.தண்ணீர் சேர்க்க தேவையில்லை, தக்காளி விடும் தண்ணீரே போதுமானது.

எல்லாம் நன்கு வெந்து குழைந்து வந்தவுடன்,   பிரட்டி விட்டு பரிமாறலாம். கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்

 

ooiiiii (1)

தேன்மொழி 

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *