கீரை பாச்சோறு/ keerai rice

2016-02-11
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
 
நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு அரிசிக்கு உண்டு..அரிசியை வைத்தே பல வகை சாதங்கள் செய்றோம்
அந்த வகையில் ஒன்று தான் கீரை பாச்சோறு…
 
உடம்புக்கு ஆரோக்கியமான சில உணவுகளை கொண்டு சமைக்க படும் இந்த கீரை பாச்சோறு நமது பாரம்பரிய சாப்பாடு….
 
தே.பொருட்கள்
 
அரிசி 400கிராம்
 
முருங்கை கீரை -ஒரு கட்டு
 
தேங்காய் 1
 
வெங்காயம் 250 கிராம்
 
சிறு பருப்பு 100 கிராம்
 
கீரை பொடி 5டீஸ்பூன்
 
மாசி தூள் 75 கிராம்
 
மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு.
 
keerai rice
செய் முறை
 
முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்….
 
பிறகு அரிசி நன்றாக கொதித்து வரும் போது அரிந்த வெங்காயம்,பறுப்பு,கீரை இவை அனைத்தையும் போட்டு கிளரி வேக விடவும்…. ஓரளவிற்கு வெந்து வரும் போது தேங்காய் பூ போட்டு நல்ல பதம் வந்ததும் அனைத்து விடலாம்…புக்கை சோறு பதம் வரும்…
 
பிறகு இன்னொரு கடாயில் எண்ணைய் விட்டு நன்றாக காய்ந்ததும் அரிந்த வெங்காயம் மட்டும் போட்டு பொன்னிறமானதும் கீரை பாச்சோற்றில் தட்டி கீரை பொடி, மாசி போட்டு கிளரி விடவும்…
 
எப்பவுமே சாதாரன சாதம் சாப்பிடுற நமக்கு இது ஒரு மாற்றத்தை கொடுக்கும் கண்ணுக்கு அழகும்,ஆரோக்கியமும்,மணமும்,காரமும்
நிறைந்த உணவு…இதுக்கு துணைக்கு ஏதும் தயாரிக்க தேவை படாது…
 
இந்த வகையிலேதான் கீரைக்கு பதிலாக சுரைக்காய் போட்டு சுரைக்கா பாச்சோறுனு சொல்வோம்..சுரைக்காய் கிடைக்கலனா சவ் சவ் கத்திரிக்காய் வச்சு சமாளிச்சுகலாம்…
 
வெளியூர், வெளி நாட்டில் வேலைல இருந்து தினமும் ஹோட்டல்ல சாப்பிடுறவங்களுக்கு இந்த பாரம்பரிய சமையல் போட்டி ஒரு வர பிரசாதம்னு சொல்லலாம்..பரம்பரையாக வந்த சமையல் அனைத்தும் மிகவும் இலகுவான செய்முறை மற்றும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கும்…
 
இந்த மாதிரி சாதங்கள் இன்னும் இதில் பாரம்பரியமாக வந்த எத்தனையோ ஈசியான உணவுகளை எடுத்துக்கோங்க ஆரோக்கியமும் உங்க பணமும் உங்களுக்கு சொந்தமாகும்….
 
சமைக்கும் நேரம் -1மணி நேரம்
 
பரிமாறும் அளவு -8 பேர்
 
அனுப்புனர்
 
மீறா சுல்தான்
 
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *