கீரை,கருவாடு,கீரை புளியாணம்/ Keerai, karuvadu and rasam

2016-01-26
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
 
இந்த உணவுகளை விரும்பாதவங்க நம்ம ஊரில் யாருமே இல்லை…. அவ்வளவு ருசி….
 
கீரைக்கு கருவாடு, கருவாடுக்கு கீரைனு அதிகமா நம்ம மனசை குழப்பாத பொருத்தமான ஓர் உணவு….
 
“மேட் ஃபார் ஈச் அதர்” எனலாம்..
 
இந்த பொருத்ததிற்கு முருங்கை கீரை
நல்லா இருக்கும். முருங்கை கீரை கண்ணுக்கு மிக நல்லது. இன்னும் நிறைய சத்து மிக்க இந்த கீரையை கொஞ்சம் அவிக்க வேண்டி வரும் இல்லனா கடுக்கும்…ஆனால்….
 
அவிக்கும் போது எல்லா சத்துக்களும் அந்த தண்ணீரோடயே வீணாகி போகும்……அப்படி….
வீண் போக கூடாதுங்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த கீரை புளியணம்
 
கீரையுடைய எல்லா சத்துக்களையும் தன்னுள்ளே தக்க வைத்து கொண்டு சுவையும் கொடுக்கும்…..
 
karuvadu
முருங்கை கீரை :
 
தே. பொருட்கள்
 
முருங்கை கீரை – இரண்டு கட்டுகள்
 
வெங்காயம் -350 கிராம்
 
அரிசி அலசிய தண்ணீர் (கழனி) தேவைக்கு
 
வத்தல் (சிகப்பு மிளகாய்) பெரியது -1
 
தேங்காய் பூ – 1 கப்
 
மாசி தூள், கீரை பொடி, உப்பு தேவைக்கு.
 
செய்முறை
 
அரிசியை அலசி கட்டியாக தண்ணீர் எடுத்து வைக்கவும்..
 
வெங்காயத்தை அரிந்து வைக்கவும்..
 
பிறகு கீரையை நல்ல கழுவி பாதி அளவு கழனி சேர்த்து அவிக்கவும்..உப்பு சேர்க்காதிங்க.
 
 
பிறகு கடாயில்எண்ணெய் ஊற்றி வெங்காயம்,வத்தல் போட்டு தாளிக்கவும்…
 
பிறகு மீதமுள்ள கழனி, அரிந்த வெங்காயம் போட்டு நன்றாக சூடு ஆனதும் அவித்து எடுத்து வைத்த கீரையை போடவும்….பிறகு….இடையில் தேங்காய் பூ, உப்பு சேர்க்க வேண்டும்..
 
கீரை வெந்ததும் அடுப்பை அனைத்து விட்டு கீரை பொடி, மாசி பொடி போட்டு முடிச்சா
கீரை ரெடி…..,அப்புறம்…….
karuvadu
கீரை புளியாணம்:
 
தே.பொருட்கள்
 
கீரை அவித்த கழனி
 
ப.மிளகாய் -1
 
சின்ன வெங்காயம் -10
 
அடை ஊறுகாய்,கீரை பொடி,உப்பு தேவைக்கு….
 
செய் முறை
 
கீரை வேகவைத்த தண்ணீரில் , மிளகாய், உப்பு, ஊறுகாய், கீரை பொடி, அரிந்த வெங்காயம் இவை அனைத்தையும் கலந்து விடவும்…
 
சமைத்த கீரையை கொஞ்சம் இதில் போட்டுக்கலாம்…
 
கீரை தாளிக்கும் போது தாளிப்பு எடுத்து போட்டுக்கலாம்..கீரை புளியாணம் ரெடி பிறகு….
 
karuvadu
கருவாடு ஆனம்:
 
தே.பொருட்கள்
 
தொண்டங் கருவாடு – 20
 
வெங்காயம் – அரை கிலோ
 
தக்காளி -300
 
ப.மிளகாய் -2
 
புளி – எலுமிச்சை உருண்டை அளவு
 
உப்பு, மசாலா தூள் தேவைக்கு
 
செய் முறை
 
கருவாட்டை முதலில் தீயில் சுட வேண்டும். வெங்காயம்,தக்காளியை அறிந்து வச்சிகோங்க….சுட்ட கருவாட்டை பிரிச்சி வச்சிகோங்க….புளியை கரைத்து வச்சிகோங்க….
 
பிறகு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆனதும் அரிந்து வைத்த வெங்காயம்,தக்காளி,.மிளகாய்,தேங்காய் விழுது, மசாலா தூள்,உப்பு இவை அனைத்தும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும்..
 
நன்றாக கனிந்ததும் அடுப்பை அனைத்து குக்கரை திறந்து சுட்டு பிய்த்து வைத்த கருவாடு, புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்…
 
“அப்பாடா எல்லாம் ரெடி ஆயிட்டு”
 
இனி குறிப்பு பாக்கலாம்…….
 
கருவாட்டுக்கு மு. கீரை நல்லாருக்கும்…மு. கீரைல தான் புளியாணம் முழுமை அடையும்…புளி ஆணம் வேணும்னு எல்லா கீரையையும் அவிச்சா கீரை சமைக்க நன்றாக இருக்காது…
 
கருவாடு எல்லா பெரிய மீணையும் காய வைத்து சமைக்கலாம் ஆனால்…. சாளை, சூடை, தொண்டங்கருவாடுகளில் கிடைக்கிற மணம் தனிதான்….
 
கருவாட்டுக்கு மாங்காய்..கத்தரிகாய்களை வெட்டி போட்டால் மதுரமும், சுவையும்,வாசனையும் அதிகமாகும்…
 
கீரைக்கு கெட்டி கழனி வேணும்னு பக்கத்து வீடுகளில் கழனி கேப்பாங்க…..வெளியூர்..வெளி நாடுகளில் என்ன செய்வீங்க…அதனால்..
 
இரண்டு நாளைக்கு கழனியை சேமிச்சா கெட்டி கழனி கிடைக்கும்…..
 
இந்த சுவையான உணவுக்கு சூடான சோறுல சுத்தமான நெய் கொஞ்சம் சேர்த்து பொடி வெங்காயம்
பச்சையாக கடிச்சு சாப்ட்டாாாா…சான்ஸே
இல்லைங்க…இதற்கு இணையா எதுவுமே வராது…
 
பெரியவங்களையும்,மசக்கை பெண்களையும் சந்தோஷ படுத்துகின்ற உணவு….
 
சமைக்கும் நேரம் -3 மணி நேரம்
(எல்லாம் சேர்ந்து)
 
பறி மாறும் அளவு -ஏழு பேர்
 
அனுப்புனர்
 
மீரா சுல்தான்.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *