காயம் மருந்து/ kayam

2014-06-12
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

காயம் மருந்து எனபது லேகியம் போன்று இருக்கும் ஒரு மருந்து. இந்த மருந்து பெண்கள் சாப்பிட்டால் உடல் பலம் பெறும், மாதவிதாய் சரியாகும், வயிற்று புண் ஆறும்… இன்னும் நிறைய மருத்துவகுணம் இதற்கு இருக்கு..

எங்கள் ஊரில் பெண்கள் சுகபிரசம் ஆன 1வாரத்தில் குழந்தை பெற்ற தாயிக்கு இதனை கிண்டி காலையில் வெறும் வயிற்றில் 1 கப் நிறைய சாப்பிட கொடுப்பார்கள். சிசேரியன் என்றால் 40 நாள் கழித்து இதனை சாப்பிடலாம்.

இதனை சாப்பிட்டால் வயிற்றில் தங்கி இருக்கும் கசடுகள் வெளிவரும் , வயிற்றில் உள்ள புண் ஆறும்,தாய்பால் அதிகம் ஊறும், உடல் பலம் பெரும்.
மாதவிளக்கு சமையத்தில் இதனை பெண்கள் சாப்பிட்டால் கற்பபை வலுவாக இருக்கும், வயிற்றில் இருக்கும் கெட்ட அசடுகள் வெளிவரும், அதிக உதிரம் போக்கு கட்டுபடும்
.

மாதவிடாயில் குழம்பம் இருந்து குழந்தை வேண்டும் என்பவர்கள்மாதவிடாய் வரும் 5 நாட்களுக்கு இந்த காயப் பொடியினை மட்டும் தனியாக தண்ணீரில் திக்காக குழைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிதாய் சரியாகி சில மாதங்களிலே கரு தரிக்கும் என்பார்கள்…
கர்பிணி பெண்கள் கட்டாயம் இந்த லேகியத்தினை சாப்பிடக்கூடாது.
மற்ற பெண்கள் இதனை எப்ப வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.
காயப் பொடி எப்படி செய்வது என்று சொல்கிறேன்..

காயப்பொடி செய்ய தேவையான பொருட்கள்:
1. மஞ்சள் -100 கிராம்
2. சுக்கு – 100 கிராம்
3. சதகுப்பை -100 கிராம்
4. சாலியா – 50 கிராம்
5. வாய்விளாங்காம் – 25 கிராம்
6. ஓமம் -25 கிராம்
7. கரும்சீரகம் – 25 கிராம்
8. வெப்பலை அரிசி – 25 கிராம்
9. குரசானி ஓமம் – 25 கிராம்
10. காட்டுகருஞ்சீரகம் – 10 கிராம்
11. பால்காயம்- 10 கிராம்
12. ஜாதிக்காய் – 2
13. கடுக்காய் – 2
14. மாசாக்காய் – 3
15. தாண்டிக்காய் – 2
16. சமுத்திரபழம் – 4
17. அக்ரா – 50 கிராம்
18. சித்தரத்தை – 50 கிராம்
19. அதிமதரம் – 5 கிராம்
20. திப்பிலி – 15கிராம்
21. சீரகம் – 25 கிராம்
22. சோம்பு – 25 கிராம்
23. மிளகு – 100கிராம்
24. வெந்தயம் – 100 கிராம்
25. கடுகு – 50 கிராம்
26. மல்லி – 200 கிராம்
27. மாவிளங்கப்பட்டை – 100கிராம்
28. ஏலக்காய் – 15 கிராம்
29. வால்மிளகு – 20 கிராம்
30. பட்டை கருவா – 100 கிராம்
31. சார்னவேர் – 25 கிராம்
32. நர்க்முளம் – 25 கிராம்
33. பெருங்காய் – 10கிராம்
34. பப்படப் புல் – 25 கிராம்.
இந்த பொருட்கள் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இது கிடைக்கும்இதனை வாங்கி நன்றாக சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து பொடியாக திரித்து வைக்கவும். காயப்பொடி ரெடி. இதனை டைட்டான டப்பாவில் போட்டு வைத்து விட்டால் எத்துனை ஆண்டுகள் ஆனாலும் வீண்ணாக போகாது தேவைக்கு கிண்டிக்கொள்ளலாம்.

இப்ப காயம் மருந்து கிண்டுவது எப்படினு சொல்கிறேன்.
காயம் மருந்து:

தேவையாண பொருட்கள்:
காயப் பொடி – 100 கிராம்
தேங்காய் – 10
முட்டை – 10
சீனி – 1/4 கிலோ
கருபட்டி – 1/2கிலோ
பூண்டு – 1/4 கிலோ
கசகசா- 100கிராம்
பாதம் – 100கிராம்
முந்திரி – 100கிராம்
பிஸ்தா – 50கிராம்
நெய் – 100கிராம்
இதயம் நல்லெண்ணெய் – 100கிராம்

 

Method

Step 1

கருபட்டியினை சிறிது தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிக்கட்டி தனியாக வைக்கவும்

Step 2

தேங்காயினை துருவி தலைபால் எடுத்து தனியாக வைக்கவும். 2வது பாலை தனியாக எடுத்து வைக்கவும்.

Step 3

முந்திரி,கசகசா,பாதம்,பிஸ்தாவை நைசாக அரைத்து வைக்கவும்.

Step 4

முட்டையினை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக நுரை பொங்க அடித்து வைக்கவும்.

Step 5

பூண்டை தோல் நீங்கி தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும்

Step 6

தேங்காயின் தலைபாலில் அரைத்த முந்திரி விழுதினை சேர்க்கவும் பிறகு அதில் அடித்த முட்டையினை சேர்க்கவும், இதனுடன் வேகவைத்த பூண்டையும் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.

Step 7

அடி கணமான பாத்திரத்தில் 2வது தேங்காய் பாலை ஊற்றி இதனுடன் காயப்பொடி சேர்த்து வேகவிடவும். இதில் சீனி, வடிகட்டிய கருபட்டி சேர்க்கவும் நன்றாக காய்ப்பொடி கரைந்து கொஞ்சம் திக்காக வரும் பொழுது தலைப்பாலினை சேர்க்கவும். நன்றாக தொடர்ந்து கைவிடாமல் கிண்டவும் நன்றாக லேகியபதம் வந்த பின்பு நெய், எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

 

இது மிகவும் சுவையாக இருக்கும். இதனை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. கைபடாமல் டைட்டான டப்பாவில் போட்டு ஃப்ரிஜில் வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.

Average Member Rating

(5 / 5)

5 5 2
Rate this recipe

2 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Recipe Comments

Comment (1)

 1. posted by @(R@ on November 9, 2014

  how munch quantity have to intake & for how many days

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *