காயல் ஸ்பெஷல் கறி ஊறுகாய்/ Kayal spl mutton pickle

2016-01-11
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

தேவையான பொருட்கள்:-
========================

மட்டன்/பீஃப் -600gm
தக்காளி -1kg
வினிகர் -150 ml
ப.மிளகாய் -4
வத்தல் தூள்-தேவைக்கு
உப்பு -தேவைக்கு
சிவப்பு கலர்-தேவைப்பட்டால்
தாளிக்க:-
========
கடுகு -கொஞ்சம்
கறிவேப்பிலை -1கொத்து
பூண்டு -10-15பற்கள்
சிவப்பு வத்தல் -5
காயல் கீரைப்பொடி- தேவைக்கு
எண்ணெய் -150 ml

mutton pickle

செய்முறை :-
===========
கறியை மிக சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி கறியுடன் வினிகர்,ப.மிளகாய்,உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும் .

தக்காளியை அரைத்து வைத்து கொள்ளவும். கறி வெந்ததும் அரைத்த தக்காளி சேர்த்து கொதிக்க வைத்து நன்கு வற்ற விடவும்.உப்பு,காரம்,புளிப்பு சரிபார்த்து தேவைக்கு உப்பு,வத்தல் தூள்,வினிகர் சேர்க்கவும்.மிகச்சிறிது சிவப்பு கலர் சேர்க்கவும்.

தக்காளி நன்கு வற்றி கறியுடன் சேர்ந்ததும் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்ததை சேர்த்து தாளித்து,காயல் கீரைப்பொடி சேர்த்து தாளித்து கறி ஊறுகாயுடன் சேர்க்கவும்.

காயல் கீரைப்பொடி :-
===================
சிவப்பு வத்தல் -¼Kg
சீரகம்-25gm
சோம்பு -25gm

வெறும் வாணலியில் இவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.கீரைப்பொடி தயார்.

Haleemun nisa,
Bangalore.

Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *