காயல் கறி பிரியாணி /Kayal Mutton Biryani

2016-06-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

காயல் கறி பிரியாணி

#Kayal_Samayal# #Ramadan_Special#
#Kayal_Kari_Biriyani#

தேவையான பொருட்கள்:

More recipes please visit www.kayalsamayal.com

பாஸ்மதி அரிசி – 1kg

கறி – 1 1/2 kg

நெய் – 250 கிராம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 150 கிராம்

ஏலக்காய் – 5 கிராம்

பட்டை – 5 கிராம்

கிராம்பு – 5 கிராம்

தயிர் – 200 மில்லி

உப்பு – தேவைக்கு

பல்லாரி – 300 கிராம்

ரோஸ் எஸ்ஸன்ஸ் – 3 drops

முந்திரி – 25 கிராம்

பிஸ்தா – 25 கிராம்

கசகசா – 40 கிராம்

பாதாம் – 25 கிராம்

அக்ரோட் – 10 கிராம்

கிஸ்மிஸ் – 30 கிராம்

ஆவின் பால் – 1/4 லிட்டர்

தேங்காய் பால் பவுடர் – 100கிராம்

மல்லி இலை – 100 கிராம்

புதினா – 100 கிராம்

ரம்ப இலை – 5

பச்சை மிளகாய் – 50 கிராம்

எலுமிச்சை – 1

செய்முறை :

Mutton biryani

1. பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பின் அதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3. இஞ்சி பூண்டு பேஸ்டை இரண்டு பிரிவாக பிரிக்கவும்.

4. ஒரு பிரிவு பேஸ்ட்டில் 100 கிராம் தயிர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், 1 ரம்ப இலை போட்டு தனியாக வைக்கவும்.

5. அடுப்பில் சட்டியை வைத்து சூடு ஆனதும் நெய் ஊற்றவும். பின் கட் செய்து வைத்த வெங்காயத்தில் பாதியை சேர்த்து சிறிது கோல்டன் கலர் ஆனவுடன், மிக்ஸ் செய்து வைத்த இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின் கறியை சேர்க்கவும்.

6. பின் மீதம் உள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், புதினா, மல்லி இலை, ரம்ப இலை, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து கறியை நன்கு வேக விடவும்.

7. பாதாம், பிஸ்தா, கசகசா, அக்ரோட், முந்திரி எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

8. தேங்காய் பவுடரை ஆவின் பாலுடன் மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

9. கறி நன்கு வெந்ததும், அரைத்து வைத்த நட்ஸ் பேஸ்ட், ஆவின் பால் மிக்ஸ் இரண்டையும் சேர்க்கவும்.

10. கறி நன்கு திரண்டு வந்ததும், அடுப்பை அனைத்து சட்டியை கீழே இறக்கவும்.

11. மற்றொரு சட்டியை எடுத்து அதில் ஒரு லேயர் சோறு அதன் மேல் கறி கலவை என்று மாற்றி மாற்றி லேயர் போடவும்.

12. கடைசியில் சிறிதளவு தண்ணீரில் எஸ்ஸன்ஸ், லெமன் ஜூஸ் கலந்து தெளித்து, அடுப்பின் மேல் தோசை தவாவை வைத்து அதன் மேல் சட்டியை வைத்து குறைந்த தணலில் அரை மணி நேரம் வேக வைத்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் காயல் கறி பிரியாணி தயார்.

தோசை தவாவின் மீது வைப்பதால் அடி பிடிக்காமல் இருக்கும்.

வெள்ளரிக்காய் ராய்தா, ஜாம் உடன் சாப்பிட கலக்கலாக இருக்கும்.

பெருநாள் அன்று இந்த பிரியாணியை செய்து அசத்துங்கள் தோளிகளே..

காயல் மணம் மாறாத சுவையான காயல் கறி பிரியாணியை நமக்காக செய்து அனுப்பியவர்

Ameena Ashab – காயல்

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *