Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

2017-07-02
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

முருங்கைகாய் கோழிகறி ஆணம்

More recipes please visit www.kayalsamayal.com

தேவையான பொருட்கள்:

கோழி கறி – 3/4 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி -1
பச்ச மிளகாய் -2
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
காயல் கறி மசாலா – 2 மே.கரண்டி (கார தேவைக்கு)
முருங்கைக்காய் -1
தேங்காய், முந்திரி விழுது – 3 மே.கரண்டி
தண்ணீர் – 1 முதல் 11/2 கப்

தாளிப்பு:

தேங்காய் எண்ணெய் – 100மில்லி
நெய் – 3 மே.கரண்டி

இஞ்சி பூண்டு விழுது -2 மே.கரண்டி
தயிர் – 3- 4 மே.கரண்டி
பட்டை 1
ஏலக்காய், கிராம்பு – தலா 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை:

More recipes please visit www.kayalsamayal.com

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் , நெய் விட்டு அதில் நீட்டமாக நறுக்கிய கொஞ்சம் வெங்காயம் போட்டு வதக்கவும்.

பிறகு தாளிப்பு தயிரை ஊற்றி மூடி போட்டு குறைந்த தணலில் வெங்காயம் பொன்னிறமாக பொறிய வைக்கவும். பிறகு மஞ்சள் தூள் , தனி மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். மீதியிருக்கும் வெங்காயம் , ப.மிளகாய், கோழிதுண்டுகள், தக்காளி கறிவேப்பிலை காயல் கறி மசாலா தூவி குறைந்த தணலில் எண்ணெய் பிரியும் வரை மூடி போட்டு வேக வைக்கவும்.

பிறகு அரைத்த தேங்காய் விழுதுடன் தண்ணீர் தேவைக்கு உப்பு கலந்து மூடி போட்டு வேக விடவும். கோழி பாதி வெந்த பிறகு நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து மூடி போட்டு 20முதல் 25 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைத்து இறக்கவும். சுவையாக கோழிகறி ஆணம் ரெடி..

ஆணம் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்றால் தேங்காய் பேஸ்ட் விடும் பொழுது தண்ணீரின் அளவை கூட்டிக்கொள்ளவும்.

கோழிக்கறி ஆணத்தில் சமைக்கும் பொழுதே தண்ணீர் விடும் ஆகையால் தேவைக்கு பார்த்து தண்ணீரின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யவும்.

முருங்கைக்காய் போட்டு ஆணத்தினை அதிக நேரம் வைத்தால் முருங்கைக்காய் காயாக இருக்காது குச்சிகளாக தான் இருக்கு.

 chicken curry
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

  • stuffed chappatti1

    Stuffed Chapatti / ஸ்டஃப்டு சப்பாத்தி

  • garlic-naan

    Garlic Naan /கார்லிக் நாண்

  • bananaleaf-fish-fry

    வாழை இலை மசாலா மீன்/ banana leaf fish fry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *