களறி கறி / kalari kari

2016-01-17
  • Yield : 4
  • Servings : 4
  • Prep Time : 10m
  • Cook Time : 30m
  • Ready In : 0m

தேவையானவை :

kalari

மட்டன் – ½ கிலோ
சிலிப்பி – 2 துண்டு
தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
நறுநெய் – 100 கிராம்
வெங்காயம் – 75 கிராம்
இஞ்சி & பூண்டு – 2 டீ ஸ்பூன்
தயிர் – 50 கிராம்
கருவாப்பட்டை – 3
கிராம்பு – 2
மாங்காய் – 4 துண்டுகள்
கருவேப்பிலை – 2 கொத்து
நச்சீரக தூள் – 1 டீ ஸ்பூன்
பெருஞ்சீரக தூள் – 1 டீ ஸ்பூன்
தனியா தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்
வாழைக்காய் – 1
அரைத்த தேங்காய் – ½ கப்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
களறி கறி (2)

செய்முறை விளக்கம் :

 

முதலில் கடாயில் நறுநெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் 2 வெங்காயம் வெட்டி போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் பொன் நிறமாகியதும் தயிர், இஞ்சி, பூண்டு விழுது , கருவாப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாம் சேர்த்து தாளிக்கவும்.
இவைகள் பொன்னிறமாகியதும்,நீளவாக்கில் வெட்டிய வெங்காயம்,கருவேப்பிலை கொத்து, நச்சீரக தூள், பெருஞ்சீரக தூள், தனியா தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் , பச்சை மிளகாய் மற்றும் உப்பு இவைகளை சேர்த்து போட்டு நன்கு பொரிய வைக்கவும்.
பின்பு கழுவிய கறிகளை போட்டு நன்கு கலந்து அத்துடன் மாங்காய் துன்டுகளையும் போட்டு வேக வைககவும்.
கறி வெந்தபின், வாழைக்காய் மற்றும் தேங்காய் விட்டு வாழைக்காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
கிரேவி தண்ணீர் விட்டு இல்லாமல் நன்கு வற்றியதும் இறக்கவும்.
சுவையான களரி கறி ரெடி

சமைக்கும் நேரம்: 30 நிமிடம்.
பரிமாரும் அளவு: 4 நபர்கள்

கூடுதல் டிப்ஸ்:

கருவாப்பட்டை,கராம்பு,ஏலக்காய் சரியான அளவிற்கு எடுத்து கொண்டால்தான் மணம் நன்கு கொடுக்கும்.
இவைகளை அடிக்கடி சமையலில் எடுத்து கொண்டால் pcos போன்ற ஹார்மோன் பிரச்சினைகள் வராது.
சிலிப்பி என்பது கொழுப்பு போல் உள்ள மணிக்குடல்.நன்கு மணம் கொடுக்கும். அல்சர் நோயும் குணமாகும்.
களரி கறியில் நச்சீரக தூள் கூடுதலாகிவிட்டால் கருத்துவிடும்.
குறிப்பு:
காலம் காலமாக காயல்பட்டினத்தில் வலிமா விருந்து மற்றும் எந்த விருந்தாக இருந்தாலும் களறி கறி இடம் பெறுகிறது.
எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் காயல் மக்கள் களறி கறி, மற்றும் ரசம் இவை இருந்தால்தான் திருப்தி கொள்வார்கள்.
முஹம்மது மீரா,
காயல்பட்டினம்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *