காயல் களரி பிரியாணி/ kayal kalari biryani

2016-02-10
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
kayal kalari biryani
தேவையானவை :
 
 அரிசி – 1 கிலோ
 தண்ணீர் – 5 குட்டான்(400 கிராம்)
 சிக்கன் or மட்டன் – 2 கிலோ
 தக்காளி – ¼ கிலோ
 வெங்காயம் – ¼ கிலோ [ பல்லாரி ]
 வத்தல் தூள் – 10 கிராம் [ தனி மிளகாய்த்தூள்
 மஞ்சள்தூள் – 5 கிராம்
 கிஸ்மிஸ் – 25 கிராம் [ மேலே தூவ ]
 அ.பருப்பு – 50 கிராம் [ மேலே தூவ ]
 மல்லி, புதினா – 50 கிராம்
 எலுமிச்சை – 1
 பன்னீர் – 3 டீ ஸ்பூன்
 
தாளிக்க தேவையானவை :
 
 நெய் – – 150 கிராம்
 தேங்காய் எண்ணெய் – 1௦௦ கிராம்
 இஞ்சி – 1௦௦ கிராம்
 பூண்டு – 1௦௦ கிராம்
 ஏலம் – 15 கிராம்
 கருவாப்பட்டை – 30 கிராம்
 கிராம்பு – 5 கிராம்
 ரம்பா இலை – 3
 தயிர் – 1௦௦ ML
 பச்சைமிளகாய் – 5
அரைக்க தேவையானவை :
 அ. பருப்பு – 30 கிராம்
 கசகசா – 1௦ கிராம்
 பாதாம் – 5 கிராம்
 பிஸ்தா – 5 கிராம்
 
kayal kalari biryani
செய்முறை விளக்கம் :
 
 கறியை சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ளவும்.
 
 வெங்காயத்தை நீளவாக்கில் கட் பண்ணி வைத்துக்கொள்ளவும்.அதே போல் தக்காளியையும் கட் பண்ணி வைத்துக்கொள்ளவும்
 
 மல்லி மற்றும் புதினா இலைகளை சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
 
தாளிப்பு விளக்கம் :
 
 ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி இரு வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
 
 வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு, தயிர், கருவாப்பட்டை, கிராம்பு
ஏலம், ரம்பா இலை மற்றும் பச்சைமிளகாய் இவைகளை போட்டு தாழிக்கவும்.
 
 தாளிப்பு பொறிந்ததும் கறி, மஞ்சள்தூள், தனி மசாலா, உப்பு, வெங்காயம், தக்காளி
மல்லி, புதினா இலை இவைகளை ஒன்றாக போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
 
 கறி வேகுறதுக்குள் அ.பருப்பு,கசகசா, பாதாம் மற்றும் பிஸ்தா இவைககை ஒன்றாக சேர்த்து மிக்ஸ்யில் போட்டு நன்கு அரைத்து வைக்கவும்.
 
 அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு அரிசியை கழுவி வைத்துக்கொள்ளவும்
 
 எலுமிச்சையை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
 
 கறி நன்கு வெந்ததும், கறியின் தண்ணீர் அளவை கவனிக்கவும்
 
 ஒரு படியின் கணக்கிற்கு கறியின் தண்ணீரை அளந்து, குறைவிற்கு தண்ணீர் ஊற்றி, கறி கலவையுடன் அரிசியை போட்டு குறைவான தீயில் வேக வைக்கவும்.
 
 அரிசி வெந்ததும், அரைத்து வைத்த கலவையை அதனுடன் ஊற்றி நன்கு கிளரவும்.
 
 அதனுடன் கொஞ்சம் பன்னீர் ஊற்றவும்.
 
 இறக்கு நேரத்தில் எலுமிச்சை சாறை தெளிவாக ஊற்றி கிஸ்மிஸ், அ.பருப்பு போட்டு கிளரி விட்டு இறக்கிவிடவும்.
 
தயார் செய்யும் நேரம் : ½ மணி நேரம்.
சமைக்கும் நேரம் : ½ மணி நேரம்.
பரிமாறும் அளவு : 10 நபர்கள் சாப்பிடலாம்.
 
கூடுதல் குறிப்பு:
• Rice Cooker Glass அளவிற்கு அரிசி எடுத்தால், 1 Glass அரிசிக்கு 1.75 Glass தண்ணீர் வைக்கவும்.
 
• அரிசி கொஞ்சம் வெந்ததும் ஒரு பழைய ரொட்டி தவா மேல் வைத்தோ அல்லது ஏதாவது அடித்தட்டு ஒன்று வைத்து அதன் மேல் பிரியாணி கடாயை வைத்தால் அடிப்பிடிக்காது.கரண்டியின் கம்பை வைத்து கிளரி விட்டால் குளைந்து போகாது.
 
• அரைத்த பாதாம், பிஸ்தா விடும் போது, குறைவாக தீயில் வைக்கவும்.கரண்டியின் பிடியை வைத்து கிளரி கொண்டே இருக்கவும். நாம் கிளரகிளர சாப்பாடு சேர்ந்தார்ப்போல் இருக்கும்.
 
• எலுமிச்சை ஊற்றினால் சாப்பாடு ஒன்று ஒன்றாக [ விரைபோல் ] ஆகிவிடும்.
 
kayal kalari biryani
குறிப்பு :
 
• பிரியாணி என்ற வார்த்தை பாரசீக மொழியான birinj என்பதில் இருந்து உருவானது.
 
• Birinj என்றால் rice என்று பொருள்படும்.
 
 பாபர் இந்தியா வந்த பிறகு, முகலாயர்களின் காலத்தில் தான் புதிதாக பிரியாணி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
 ஆரம்ப காலத்தில் டெல்லி,லக்னோ முதலிய இடங்களில் பலவகையான பிரியாணிகள் தயாரிக்கப்பட்டன.பிரியாணி தயாரிப்பதற்கு பல வகையான அரிசிகளை பயன்படுத்தினர்
 
 வட இந்தியாவில் Brown rice ம் ,தென் இந்தியாவில் ஜீரக சம்பா அரிசியும் பயன்படுத்தினார்கள்.இன்றைய காலகட்டத்தில் பாஸ்மதி என்னும் அரிசியே மிகிதமாக இடம் பெறுகிறது.
 
 மட்டன் பிரியாணியில் சோடியம் பொட்டாசியம்,கார்போ ஹைட்ரேட், ப்ரோடீன், வைட்டமின் A மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன.
 
 உலக அளவில் முஸ்லிம்களே பெருநாள் காலங்களிலும்,கல்யாண விருந்துகளிலும் மற்றும் எந்த ஒரு விருந்துகளிலும் பிரியாணி செய்யும் பழக்கம் உடையவர்கள்.
 
 மாற்று மத சகோதரர்கள் கூட, பாய்கள் வீட்டு கல்யானம் என்றால் அங்கு பிரியாணி இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு இஸ்லாமிய மக்கள் பிரியாணி செய்வதில் கைதேர்ந்தவர்கள்.
 
 இறால்,மட்டன், பீப், காய்கறி,மீன்,காளான்,ஒட்டகம் இப்படி அனைத்திலும் பிரியாணி செய்து விரும்பி சாப்பிடுகிறார்கள்.
 
• காயல்பட்டினத்தில் கல்யாண விருந்து கொண்டாட்டங்கள் இரு நாட்கள் நடக்கும், அதில் கல்யாணம் முடிந்து, வலிமா விருந்து வைப்பார்கள் அதில் வெளியூர்களில் இருந்து வரும் மக்களை கண்ணியப்படுத்துவதற்காக அவர்களுக்கு நிச்சயம் பிரியாணி விருந்து தான் வைப்பார்கள்.
 
 சிலர் விரும்பியவர்கள் வெளியூர் மக்களுக்கும்,ஆண்கள் விருந்திற்கும் பிரியாணி விருந்து வைப்பார்கள்.
 
 கல்யாணம் முடிந்த இரவில் பெண்வீட்டார் , மாப்பிள்ளை வீட்டாருக்கு பசியாரம் என்று கொடுப்பார்கள் . அப்பொழுது இடியாப்பம் பிரியாணி கொடுப்பார்கள்.
 
 
முஹம்மது மீரா,
Average Member Rating

(4 / 5)

4 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *