“காடை ப்ரை & காடை 65” / Kadai fry/ kadai 65

2016-02-03
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
“காடை ப்ரை & காடை 65”
 
குறிப்பு : சிக்கனை போல் காடையும் சுவையாக இருக்கும். பரோட்டாக்கும், காடை ப்ரைக்கும் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.
 
காடை வறுவல்
****************
தேவையான பொருட்கள்:
 
காடை – 400 gr.
மசாலாத்தூள் – 5 tbsp.
தயிர் – 3 to 4 tbsp.
இ.பூண்டு விழுது – 3 tbsp.
உப்பு – தேவைக்கு.
தேங்காய் விழுது – 3 tbsp.
தக்காளி – 3.
பெ.வெங்காயம் – 3.
கொ.மல்லி இலை – அலங்கரிக்க
நெய் – 50 gr.
எண்ணெய் – 50 gr.
ஏலம், பட்டை,மிளகு,
நச்சீரகம்,பெருஞ்சீரகம் – இடித்தது.
 
kadai65
செய்முறை :
 
முதலில் கறியை சுத்தப்படுத்தி தயிர்,இ.பூ.விழுது, தேங்காய் விழுது, மசாலாத்தூள், உப்பு, தக்காளி, பெ.வெங்காயம், இடித்த மசாலாப் பொருட்கள் போட்டு பிரட்டி வரட்டிக் கொள்ளவும்.
 
பின் வாணலியில் நெய் & எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரட்டிய கறி போட்டு பொரித்து எடுக்கவும். கொ.மல்லி இலை போட்டு அலங்கரிக்கவும். காடை வறுவல் ரெடி.
சமைக்கும் நேரம் : 40 நிமிடம்.
 
காடை 65
*********
 
தேவையான பொருட்கள் :
 
காடை – 200 gr.
தயிர் – 3 tbsp.
இ.பூண்டு விழுது – 2 tbsp.
மசாலாத்தூள் – 3tbsp.
சிவப்பு கலர் பொடி- தேவைக்கு.
எலுமிச்சை சாறு – 1 1/2 tsp.
உப்பு – தேவைக்கு.
எண்ணெய் – பொரிக்க.
 
செய்முறை :
கறியுடன் மேலே சொன்ன பொருள்களை சேர்த்து பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைத்து பொரித்து எடுக்கவும். காடை 65 ரெடி.
 
பொரிக்கும் நேரம் : 20 நிமிடம்.
ஜுல்ஃபா ஹூசைன் – காயல்.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *