ஜவ்வுமிட்டாய் / javvu mittai

2015-10-23
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m

ஜவ்வுமிட்டாய் ….

பெயரை கேட்டவுடன் பள்ளி நாட்களுக்கு அழைத்து போகுதா… ஆம் நம்மில் பலரும் பள்ளிப்பருவத்தில் ஜவ்வுமிட்டாயினை பார்த்து சாப்பிடாமல் யாரும் இருக்க முடியாது … ஆம் பள்ளி வாசலில் வயதான தாத்தா நீட்டமான குச்சியில் மேல் ரோஸ் நிறத்தில் ஜவ்வுமிட்டாய் சுற்றி விற்பனை செய்துகொண்டுயிருப்பாங்க.. பள்ளி பிள்ளைகள் அவரை சுற்றி நின்று கையில் வாட்ச் , வளையல், மோதிரம், செயின் என்று வாங்கி போட்டு சாப்பிடுவோம்… அந்த நாட்கள் இன்று காணாமல் போய்விட்டது… கடைகளில் இபோழுது ஜவ்வுமிட்டாய் கிடைக்குதான்னு தெரியலை ஆனால் இதனை வீட்டிலும் செய்யலாம் என்று சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த மாமி செய்து கொடுத்தாங்க…சம ருசி…. அப்படியே பள்ளி வாசலுக்கு போய்வந்தேன்… இனி ஆசை வரும் பொழுது எல்லாம் நாமே செய்யலாம் என்று ரெசிபியினை கையோடு வாங்கிவிட்டேன்… இருங்க.. இருங்க… காயல் சமையல் மக்களுக்கு சொல்லாமல் என்னிடம் எந்த ரெசிப்பியும் இல்லை… இதோ உங்களுக்காக ஜவ்வுமிட்டாய் … நீங்களும் செய்து பாருங்கள்….
சவ்வுமிட்டாய்

20150921_170951 20150921_171901

தேவையான பொருட்கள்:

மண்டவெல்லம் 250கிராம்
தண்ணீர் இரண்டு டேபில் ஸ்பூன்
ஏலக்காய் – 5
உடைந்த வேர்கடலை – 50 கிராம்
நெய்/ எண்ணெய் – சிறுது

20150921_172639 javvu mittai

செய்முறை:

வேர்கடலை சிறுது வறுத்து தோல் நீக்கி ஒன்று இரண்டாக உடைத்து வைக்கவும்.
மண்ட வெல்லத்தில் சிறுது தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அதில் ஏலக்காய் தட்டி போட்டு வெல்லம் கரையும் வரை காய்ச்சவும்..
நன்றாக கரைந்த பின்பு இதனை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுக்கவும்.
மீண்டும் சட்டியினை அலசிவிட்டு அதில் வடிகட்டிய தண்ணீர் ஊற்றி நன்றாக நூரை பொங்க குறைந்த தணலில் காய்ச்சவும். நன்றாக கம்பி பதம் வர வேண்டும். பதம் ரொம்ப முக்கியம்.
ஒரு பெரிய தட்டில் நெய்/ எண்ணெய் தடவி அதன் மேலே காய்ச்சிய பாகினை ஊற்றவும். அதன் மேலே உடைத்த வேர்கடலை போடவும்( பாகு சூடாக இருக்கும்) ஆகையால் கத்தியால் ஓரத்தில் இருந்து உரைந்த பாகினை பிரட்டி போடவும்.
கையில் சூடு தாங்கும் பொழுது மிட்டாயினை இரு கைகளால் எடுத்து நன்றாக இழுத்து விடவும். நன்றாக ஜவ்வுமிட்டாய் போல் இழுத்து இழுத்து விடனும். காக்கி கலரில் இருக்கும் மிட்டாய் இழுக்க இழுக்க நல்ல கோல்டன் கலருக்கு வரும் பிறகு அதனை விரும்பிய வடிவில் நறுக்கி சாப்பிடவும்..
சுவையான ஜவ்வுமிட்டாய் ரெடி….

 

குறிப்பு: வெல்லம் சரியில்லை என்றால் மிட்டாய் சரியாக வராது. வேர்கடலை விரும்பினால் சேர்க்கலாம். பாகு பதம் சரியில்லை என்றால் மிட்டாய் முறுகல் ஆகிவிடும்.

Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

  • cuttlet1

    Chicken cutlet /சிக்கன் கட்லெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *