இஃப்த்தார் பார்ட்டி மெனு/ iftar party menu

2014-06-28
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

Method

Step 1

அழகான ரமலான் மாதத்தில் பல நல்ல அமல்கள் நம் மனதுக்கு பல மகிழ்ச்சியினை தருகிறது. அதில் ஒன்று தான் நோன்பு திறக்கும் நேரம். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

Step 2

இந்த மகிழ்ச்சியினை குடும்ப நபர்கள், மற்றும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து நோன்பு திறப்பதில் அல்லாஹ் தாலா நிறைய நன்மைகள் வைத்திருக்கிறான்.

Step 3

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

Step 4

நமது ஊர்களில் சில இடங்களில் அவர் அவர் வசதிக்கு ஏற்ப சின்னதாகவோ, பெரிதாகவோ குடும்ப நபர்கள், மற்றும் தெருவில் வசிப்பவர்களை வீட்டில் அழைத்து நோன்பு திறக்க வைப்பார்கள். அனைவரையும் ஒன்றாய் இருந்து நோன்பு திறக்கும் அழகே தனி தான். ஆனால் இன்று ஓவ்வொரு ஊர்ராக தனி தனியாக பிரிந்துவந்துவிட்டோம்.. இங்கு இருக்கும் நண்பர்களை அழைத்து வீட்டில் நோன்பு திறக்க வைப்பதும் ஒரு வித அழகு தான். ஊரில் இருக்கும் பொழுது வீட்டில் பெரியவர்களின் ஆலோசனையில் இஃப்த்தார் பார்ட்டிக்கு ரெடி பண்ணுவோம். தனியாக இருக்கும் மக்களுக்கு கொஞ்சம்  ரெடி பண்ணூவதில் சிரமமம் இருக்கலாம். அதுக்கு தான் சில டிப்ஸ்.

 

 1.முதலில் இஃப்த்தார் எந்த வீக் என்டில் கொடுக்கிறோம் என்று முடிவு செய்துக்கொள்ளவும்.
2.வீட்டில் எத்தனை பேர் அமர இடம் இருக்கோ அந்த அளவுக்கு மட்டுமே ஆட்களை கூப்பிடவும். ( சொந்த வீடு போல் இங்கு எங்கே வீடு இருக்கு. எல்லாம் அட்ட பெட்டி அளவுக்கு தானே இருக்கு)
3.யார் யாரை அழைக்க விரும்புகிறோமோ அவர்களை அனைவரையும் ஒரு பேப்பரில் எழுதி போன் செய்து இஃப்த்தாருக்கு அழைப்பு கொடுக்கவும்.
4.பின்பு என்ன மெனு ரெடி பண்ணனும் என்று ஒரு வாரம் முன்பே ரெடி பண்ணவும்.
5.என்ன என்ன ஐட்டம் ரெடி பண்ணனும் என்று நினைத்த அனைத்து ஐட்டங்களையும் பேப்பரில் எழுதவும்.
6. அதன் அருகிலே அந்த ஐட்டங்களுக்கு என்ன என்ன பொருட்கள் தேவையினு ரப்பாக எழுதி வைக்கவும். உ.த: கட்லெட் – (கீமா,ரஸ்க்,உருளைகிழங்கு,முட்டை) அப்படினு எழுதி வைக்கவும்.
7.இதில் எந்த எந்த பொருட்கள் வீட்டில் இல்லை என்று தெரிந்துவிடும். மீதியிருக்கும் ஐட்டங்களை மட்டும் ஒரு லிஸ்ட் எடுத்து அந்த பொருட்களை மட்டும் கடையில் வாங்கி வைக்கவும். (கடைசி நேரத்தில் இந்த சாமான் இல்லை என்ற தொல்லை இருக்காது, வீண் அலைச்சல் இல்லாமல் இருக்கும்)
8. எத்தனை பேர் வராங்களோ அவங்களுக்கு தகுந்தது போல் யூஸ் அந் தோரோ தண்ணீர்கப்,தட்டு, ஸ்பூன், ஐஸ் கீரிம் கப், ஜூஸ் டம்ளர் கஞ்சி கப்பு,டிஷ்யூ பேப்பர் என்று தேவையான சாமாண்களை வாங்கிவிடவும். (இது வாங்கி வைத்துவிட்டால் பாத்திரம் கழுவும் வேலை மிச்சம்)
9.இப்ப பொருட்கள் எல்லாமே ரெடி ஆச்சு, இஃப்த்தார் பார்ட்டிக்கு ஒரு நாள் முன்னாடியே ஒரு சில ஐட்டங்கள் முன்பே செய்து வைத்துவிடவும்.
10.பாலூடா, கடல்பாசி முதல் நாளே செய்து ப்ரிஜில் வைத்துவிடலாம்
11.கட்லெட்க்கு, மற்ற ஸ்டப்பிங் ஐட்டங்களை முதல் நாளே ரெடி செய்து ஃப்ரிஜ் லாக் கவரில் போட்டு பிரிஜில் வைத்துவிடவும்.
12.அப்ப அப்ப சேரும் பாத்திரங்களை உடனே அலசி வைக்கவும்.
13.பார்ட்டிஅன்று காலையில் கஞ்சி போடவும், மற்றும் வடைக்கு, பஜ்ஜி, போண்டாக்கு ரெடி செய்யும் ஐட்டங்களை தாயர் செய்து வைக்கவும்.
14.நிறைய ஐட்டங்கள் செய்யும் பொழுதும் பலகாரங்களின் எண்ணிக்கையினை குறைத்துக்கொள்ளவும்.  15. சிறிவர்களையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளவும். குழந்தைகள் சாப்பிடுமோ இல்லையோ அவங்க தட்டிலும் எல்லா ஐட்டங்களையும் வைக்கசொல்லுவாங்க. ஆகையல் மொத்த்தாமக 15பேர்  என்றால் நீங்கள் செய்யும் பஜ்ஜி, சொஜ்ஜி ஓவ்வொன்றிலும் எண்ணிக்கை 20 ,22க்குள் இருக்கட்டும். அதிகம் செய்தால் அதிகம் மிஞ்சிவிடும். “உண்ணுங்கள் பருகுங்கள் வீன்விரயம் செய்யாதீர்கள்” என்பது நபிகள் நாயகம் (ஸல்) மொழிந்த ஓர் நபி மொழி
16. நோன்பு திறக்கும் 2 , 3 மணிநேரம் முன்பிலிருந்து பொறிக்கும் ஐட்டங்களை பொறித்து வைக்கவும்.

17.கடைசி நிமிடம் வரை அடுப்படியிலே இருக்க வேண்டாம். நோன்பு திறக்கும் அரை மணி நேரம் முன்பே ஓவனில் சூடு செய்துக்கொள்ளலாம்.
18. பழங்களை எல்லாம் 1 மணி நேரம் முன்பு கட் செய்து தட்டில் அழகாக வைத்து பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி வைத்துவிடவும்.
19. பொறித்த ஐட்டங்களை அப்படியே தட்டில் வைக்கமல் கண்களின் பார்வைக்கு கொஞ்சம் விருத்தளிக்கும் படி கொஞ்சம் அழகாக வைக்கவும்.
20. இஃப்த்தார் டைமுக்கு 10 நிமிடம் முன்பே சபை ரெடியாக இருந்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்துவிடவும்.  ”நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். புகாரி: 1957

21.நோன்பு துறப்பதை அதன் நேரத்தை கடக்க விடாமல் சரியான நேரத்தில் துறப்பவர்கள் நன்மையில் நீடிப்பார்கள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

22. நோன்பு நேரத்தில் நினைவுக்கூற சில துஆக்கள்
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16.

23. இஃப்த்தார் பார்ட்டி முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாக சேர்த்து தொழுகை ஜமாத்தை தொழுதுவிடவும்.
24. மீதியிருக்கும் ஸ்நாக்ஸ் சை அவங்க விரும்பியதனை வந்தவங்களுக்கு கொடுத்துவிடவும். மற்றதை ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரிஜில் எடுத்து வைத்துவிட்டால் மறு நாள் இஃப்த்தாருக்கு வைத்துக்கொள்ளலாம்.


Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

 • cuttlet1

  Chicken cutlet /சிக்கன் கட்லெட்

 • brosted-chicken

  broasted chicken/புரோஸ்டட் சிக்கன்

 • nellai-halwa

  திருநெல்வேலி ஹல்வா / Tirunelveli Halwa

 • chicken-cuttlet

  சிக்கன் கட்லெட்/ Chicken cutlet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *