ஹம்மூஸ் & ஹம்மூஸ் சாண்ட்விச்

2016-02-11
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
“காயல் சமையல் – இஸ்லாமிய பாரம்பரிய சமையல் கொண்டாட்டம்”
 
ஹம்மூஸ் & ஹம்மூஸ் சாண்ட்விச்
 
குறிப்பு : இது ஒரு அரேபிய உணவு. எளிதாக செய்து விடலாம். பிரெட் உடன் சேர்த்து சாப்பிடலாம். அதிகம் காரம் இல்லாததால் குழந்தைகளுக்கும் ஏற்றது.
 
தேவையான பொருள்கள் :
 
கொண்டை கடலை – 1 கப் (வெள்ளை)
தஹினி பேஸ்ட் – 1 கப்
எலுமிச்சை சாறு – 5 to 6 tbsp.
மிளகு தூள் – 2 tsp.
ஆலிவ் எண்ணெய் – 5 tbsp.
உப்பு – தேவைக்கு.
தண்ணீர் – தேவைக்கு.
 
தஹினி பேஸ்ட் செய்ய :
 
எள் – 1 கப் (வெள்ளை).
ஆலிவ் எண்ணெய் – 4 tbsp.
உப்பு – தேவைக்கு.
 
எள்ளை லேசாக வறுத்து
ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
 
செய்முறை :
 
மிக்ஸியில் மேலே சொன்ன பொருள்களை சேர்த்து நன்கு பட்டு போல் அரைத்தால் ஹம்மூஸ் ரெடி.
 
சாண்ட்விச் செய்ய:
 
பிரட் – 1 பாக்கெட்.
ஹம்மூஸ் பேஸ்ட் – தேவைக்கு.
பெ.வெங்காயம் – 3
தக்காளி – 2
சிக்கன் – 250 gr.
மிளகு தூள் – 11/2 tsp.
கொ.மல்லி இலை – தேவைக்கு. உப்பு – தேவைக்கு.
எண்ணெய் – 4tbsp.
PhotoCollage_327000656
செய்முறை :
 
முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி இ.பூ.பேஸ்ட், தயிர், உப்பு, மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி வரட்டிக் கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெ.வெ., போட்டு பொன்னிறமானதும் தக்காளி போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து பிரட்டி சிக்கனை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி கொ.மல்லி இலை தூவி இறக்கவும்.
 
பின் பிரட்டில் ஹம்மூஸ் தடவி சிக்கன் கலவையை வைத்து டோஸ்டரில் சிறிது நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
 
டிப்ஸ் : டோஸ்டர் இல்லாவிட்டால் தவாவில் சிறிது நெய் விட்டு பிரட்டை சிறிது முறுக விட்டு ஹம்மூஸ்
தடவி சிக்கன் கலவையை வைத்து பரிமாறவும்.
 
ஜுல்ஃபா ஹுசைன் – காயல்.
Average Member Rating

(1 / 5)

1 5 1
Rate this recipe

1 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Recipe Comments

Comment (1)

  1. posted by mymoon on September 13, 2016

    Konda kadalai oora vaikavoo vega vaikavo vendaama

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *