தேன்கூடு பன் (Khaliat Nahal/Honeycomb Bun)

2016-01-18
 • Prep Time : 0m
 • Cook Time : 0m
 • Ready In : 0m
சமையல் பற்றிய சிறுவிளக்கம் –
honeycomb
 
இது அரபு நாட்டில் பாரம்பரிய பன் ஆகும். மலேஷியாவிலும் இது பிரபலமானது. மலேஷியாவில் இதற்க்கு பெயர் தேன்கூடு பன். ஒவ்வொரு பன்னிலும் கொஞ்சம் சீஸ் நிரப்பப்பட்டு இருக்கும். இதன் மேல் தேன் கலந்த இனிப்பு பாகு ஊற்ற பட்டிருக்கும்
 
தேவையான பொருட்கள்:
 PhotoGrid_1452674381192 PhotoGrid_1452674461469 PhotoGrid_1452674495762
பன் செய்ய –
 
2 கப் மைதா மாவு
1 டேபிள் ஸ்பூன் சக்கரை
1/2 டீஸ்பூன் ட்ரை ஈஸ்ட்
1/4 கப் டீஸ்பூன் தயிர் அல்லது பட்டர் மில்க்
1/4 டீஸ்பூன் உப்பு
1/4 கப் எண்ணெய்
1/2 கப் தண்ணீர்
1 முட்டை
1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
2 டேபிள் ஸ்பூன் பால்
1/2 டீஸ்பூன் எள்
தேவையான அளவு பாதாம் முந்திரி அல்லது பிடித்தமான நட்ஸ்
 
PhotoGrid_1452674566183 PhotoGrid_1452674598495
சீஸ் நிரப்புதல் செய்ய –
100 கிராம் க்ரீம் சீஸ்
1 டீஸ்பூன் லெமன் ஜுஸ்
2 டேபிள் ஸ்பூன் அரைத்த சக்கரை
 
இனிப்பு பாகு செய்ய –
1 கப் தண்ணீர்
1/2 கப் சக்கரை
1 டேபிள் ஸ்பூன் தேன்
1 பட்டை
 
PhotoGrid_1452674622244 PhotoGrid_1452674697773
செய்யும் முறை
 
1. முதலில் ஒரு பாத்திரத்தில் இனிப்பு பாகு காய்ச்சவும். இனிப்பு பாகு செய்யும் பொருட்களை ஒன்றாக சேர்தது சக்கரை கரையும் வரை காய்ச்சி ஆர விடவும்.
 
 
2. சீஸ் நிரப்புதலும் ஒரு கிண்ணத்தில் செய்து வைக்கவும்.
 
சீஸ் நிரப்புதல் செய்யும் பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
 
3. பன் செய்ய,
 
ஒரு டம்ளரில், 1/2 கப் தண்ணீர், ஈஸ்ட்,தயிர் மற்றும் சர்க்கரை கலந்து நுரை விடும் வரை வைக்கவும்.
 
4. ஒரு பெரிய கிண்ணத்தில், உப்பு, மாவு, பேக்கிங் பவுடர், மற்றும் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதில் ஈஸ்ட் கலந்த கலவயை ஊற்றி நன்றாக பிசைந்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
 
5. பிசைந்த மாவை 30 நிமிடம் கழித்து, கைகளால் குத்தி காற்றை வெளியாக்கவும்.
 
6. மறுபடியும் மாவை பிசைந்து சிறிய பந்துகளாக உருட்டவும்.
 
7. ஒவ்வொரு மாவு பந்துகளையும் கைகளால் தட்டி நடுவில் 1 டீஸ்பூன் சீஸ் நிரப்புதல் வைத்து அழகாக பந்து போல் மடக்கவும்.
 
8. எண்ணெய் தடவிய தட்டில், மாவு பந்துகளை அடுக்கி வைக்கவும்.
 
9. 1 மணி நேரம் சென்று, அடுக்கி வைத்த மாவு பந்துகள் இரண்டு மடங்கு ஆகி விடும்.
 
10. மாவு பந்துகள் மேல் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 முட்டையை அடித்து கலக்கி தடவவும்.
 
11. இதன் மேல் எள் மற்றும் நட்ஸ் தூவவும்.
 
12. ஒவனை 180 c preheat செய்து, 15-20 நிமிடம் பேக் பன்னவும்.
 
13. ஒவனில் இருந்து வெளியே எடுத்த பன் மீது இனிப்பு பாகு ஊற்றி பரிமாறவும்.
 
சமைக்கும் நேரம்: 2 மணி நேரம்
 
பரிமாறும் அளவு: 14 பன் கிடைக்கும்
 
ஆயிஷா அப்துல் ஜபார்
 
மலேஷியா
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
 • pudding

  Condensed Milk Caramel Pudding without oven

 • soft poori

  Soft Poori / உப்பலான பூரி

 • chicken fried rice

  Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

 • chicken curry1

  Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

 • sandwich

  வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *