வெள்ளை நெய் சோறு ,மஞ்சள் நெய் சோறு, அடை ஊறுகாய் சம்பல்

2016-02-02
  • Prep Time : 0m
  • Cook Time : 0m
  • Ready In : 0m
வெள்ளை நெய் சோறு மற்றும் மஞ்சள் நெய் சோறு, அடை ஊறுகாய் சம்பல்
 
 
நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்:
 
1.அரிசி-1கப்
2.பல்லாரி-2
3.மிளகாய்-1 கீறியது
4.நெய்-2 டேபிள் ஸ்பூன்
5.தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
6. தேங்காய் பால்- 2கப் (அதாவது ஒரு பெரிய தேங்காய்லிருந்து அரைத்து பிழிந்து எடுக்கவும். தண்ணீர் தேவைக்கு சேர்த்து அரைக்கவும்.)
7.மல்லி, புதினா -2 கைப்பிடி
8.வறுத்த கிஸ்மிஸ் முந்திரி-2 ஸ்பூன்
9.இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன்
10.பட்டை, ஏலம், கருவா- தேவைக்கு
11.உப்பு- தேவைக்கு
 
செய்முறை:
 
1.பாத்திரத்தில் எண்ணெய்,நெய் சேர்த்து சூடு பண்ணவும். பின் இஞ்சி பூண்டு விழுது பட்டை, ஏலம், கருவா, கொஞ்சம் மல்லி,புதினா சேர்த்து வதக்கவும்.
2.பின் பல்லாரி,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3. பின் தேங்காய் பால் சேர்க்கவும். கொதித்ததும் அரிசி,உப்பு சேர்த்து வேக விடவும்.
4. முக்கால் பதம் வெந்ததும் மல்லி புதினா சேர்த்து 20 நிமிடம் தம்மில் போடவும்.
5. வெந்ததும் கிளறி வறுத்த கிஸ்மிஸ் முந்திரி சேர்த்து இறக்கவும்.
 
ghee rice
இப்பொழுது மஞ்சள் நெய் சோறு பற்றி பார்ப்போம்.
 
மேலே கூறியது போன்றே செய்து 2கப் தேங்காய் பாலிற்கு பதிலாக 1 1/2 கப் தேங்காய் பால் மற்றும் 1/2 கப் கறி ஆனம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு அரிசியை தட்டி வேகவிடவும். மஞ்சள் நெய்சோறு தயார்.
 
ஊறுகாய் சம்பல்
 
தேவையான பொருட்கள்
 
அடை ஊறுகாய்-1
சின்னவெங்காயம்- 10-15
மாசி தூள்-4 ஸ்பூன்
ப.மிளகாய்-2
கெட்டி தேங்காய் பால்- 2 டேபிள் ஸ்பூன்
 
செய்முறை:
 
அடை ஊறுகாயில் இறுக்கும் விதைகளை அகற்றி மாசி தூள் மற்றும் தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று போட்டு எடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் ப.மிளகாய் சேர்த்து பிசைந்து பரிமாறவும். உப்பு தேவைபட்டால் சேர்க்கவும். ஊறுகாயில் உப்பு இருப்பதால் தேவைப்படாது.
 
குறிப்பு- குறிப்பாக நெய் சோறு எல்லா வகையான விருந்து வைபவத்திலும் இடம் பெறும். ஆண்டான்டு காலமாக இதை தொடர்ந்து கொன்டே இருக்கிறோம். மஞ்சள் நெய் சோறு கந்தூரிகளில் செய்து பரிமாறுவர்.
அடை ஊறுகாய் சுவையே தனி சுவை. இது இருந்தால் மேலும் இரண்டு வாய் சோறு சாப்பிட தூன்டும்.
 
அதபியா பாசித்
உடன்குடி.
Average Member Rating

(0 / 5)

0 5 0
Rate this recipe

0 people rated this recipe

Related Recipes:
  • pudding

    Condensed Milk Caramel Pudding without oven

  • soft poori

    Soft Poori / உப்பலான பூரி

  • chicken fried rice

    Chicken Fried rice / சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (Leftover)

  • chicken curry1

    Kayal Chicken gravy / முருங்கைகாய் கோழிகறி ஆணம்

  • sandwich

    வெஜ் பிரெட் சாண்ட்விச்/veg bread sandwich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *